துபாய்: IPL 2020 போட்டித்தொடரின் 54வது போட்டி துபாயில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,யும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய இந்த போட்டியில் ராயல்ஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி இந்த ஆட்டத்துடன் முடியவில்லை, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேற முடியாமல் முடங்கிவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கி 191 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி.  கொல்கத்தா அணியின் 3 பேர் டக் அவுட் ஆக ஆட்டம் களையிழந்தது. ஆனால் களத்தில் மார்கன் இறங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது.  ரஸ்ஸலலும் அதிரடியாய் ஆடி அணியை பெரும் ஸ்கோரை நோக்கி நகர்த்திச் சென்றார்.



35 பந்துகளை எதிர்கொண்ட மார்கன், 68 ரன்கள் குவித்தார். 191 ரன்களை எடுப்பது கடினமான இலக்கு என்பதால் ஆட்டத்தின் இரண்டாம் பகுதி இயல்பானதாக இருந்தது. தோல்வியின் சாயல் ராஜஸ்தான் ராயல்ஸை தடுமாறச் செய்தது.  முதல் 4 ஓவர்களில் உத்தப்பா 6, ஸ்டோக்ஸ் 18, ஸ்டீவ் ஸ்மித் 4, சஞ்சு சாம்சன்ஒற்றை என என வரிசையாக ஆட்டமிழந்தனர்.


4 விக்கெட்களை இழந்து தவித்த அணியின் வீரர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒருவராக வெளியேறினார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.


கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும்வெற்றி பெற்றது.இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.


Read Also | IPL 2020: 99 ரன்களில் அவுட் ஆனாலும் வரலாறு படைத்த சாதனை நாயகன் Chris Gayle


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR