IPL 2020: MI vs CSK போட்டிக்கு ரெடியா? என்ன time, எந்த channel? முழு விவரம் உள்ளே!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பல ஊகங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 (IPL 2020) சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் தொடங்க உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பல ஊகங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 (IPL 2020) சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் தொடங்க உள்ளது.
இந்த லீக்கின் 13 வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை வெற்றியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நடப்பு சாம்பியனும், நான்கு முறை வெற்றியாளர்களுமான மும்பை இந்தியன்ஸை அபுதாபியில் (Abu Dhabi) உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து விளையாடும்.
கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்திற்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் CSK-வை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது நினைவிருக்கலாம்.
இரண்டு ஆண்டுகள் IPL போட்டிகளிலிருந்து விலக்கி வைக்கப்படிருந்த CSK, 2018 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி (MS Dhoni) தலைமையில் பிரம்மாண்டமாக திரும்பி வந்து போட்டியை வென்றது.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), IPL வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்து வந்துள்ளது. நான்கு முறை பட்டத்தை வென்றுள்ளது.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மகேலா ஜவ்யவர்தனா, கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி கோக்குடன் முதலில் பேட்டிங்கைத் துவக்கி வைப்பார் என்று உறுதிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில், 2019 ஜூன் மாதம் ICC கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் அரையிறுதி மோதலுக்குப் பிறகு முதல் முறையாக முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குத் திரும்புவதையும் இந்தப் போட்டி காணும்.
நாளைய போட்டியில் களம் இறங்கக்கூடிய 11 வீரர்கள்:
Chennai Super Kings:
ஷேன் வாட்சன், ஃபிராங்கோயிஸ் டு பிளெசிஸ், அம்பத்தி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார், லுங்கி என்ஜிடி / இம்ரான் தாஹிர்
Mumbai Indians:
ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், குணால் பாண்ட்யா, ஹார்திக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட் / நாதன் கூல்டர்-நைல், தவல் குல்கர்னி, ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா
இரு அணிகளின் மொத்த வீரர்களின் பட்டியல்:
Chennai Super Kings:
நாராயண் ஜகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம். ஆசிப், ரவீந்திர ஜடேஜா, எம் விஜய், எம்.எஸ்.தோனி, ஜோஷ் ஹேஸ்லூட், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், கர்ன் சர்மா, பியூஷ் சாவ்லா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷார்துல் தாக்கூர், மிட்செல் சாண்ட்னர், டுவைன் பிராவோ, லுங்கி என்ஜிடி, சாம் குர்ரான், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்
ALSO READ: IPL 2020: CSK ‘சின்ன தல’-ய பெருசா miss பண்ணுவாங்க – Dean Jones!!
Mumbai Indians:
ரோஹித் சர்மா, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், சௌரப் திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா, மிட்செல் மெக்லெனகன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், மொஹ்லின் கான், பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹார்திக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், கீரோன் பொல்லார்ட், குணால் பாண்ட்யா, அனுகுல் ராய், நாதன் கூல்டர்-நைல், இஷான் கிஷன், குயின்டன் டி கோக், ஆதித்யா தாரே
எத்தனை மணிக்கு துவக்கம்?
IST இரவு 7.30 மணிக்கு MIvsCSK போட்டி தொடங்கும். COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் போட்டிகள் நடப்பதால், இவை ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படும்.
எந்த சேனல்?
இந்த போட்டி Star Sports Network-ல் ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில் போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங்கை ஸ்டாரின் ஸ்ட்ரீமிங் செயலியான Hotstar-ரிலும் கிடைக்கும்.
ALSO READ: IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR