IPL 2020 UAE-ல் நேற்று துவங்கியது. கொரோனா காரணமாக வழக்கமான ஆடம்பரமும் கோலாகலங்களும் இல்லாமல் போனாலும், நேற்று நடந்த MI vs CSK ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு எந்த குறையும் இருக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபுதாபியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை எதிர்த்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) சனிக்கிழமை இந்திய பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் 100 போட்டிகளில் வென்ற முதல் கேப்டனாகி சாதனை படைத்தார்.


ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் MI-க்கு எதிராக CSK 163 ரன்களை வெற்றிகரமாக எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், சுமார் 2 ஆண்டுகளில் ரோஹித் ஷர்மாவின் அணிக்கு எதிராக முதல் வெற்றியை CSK அணி பதிவு செய்துள்ளது.


ALSO READ: IPL 2020: வடா பாவ்-யை வீழ்த்திய இட்லி ... CSK வெற்றி குறித்து சேவாக் ட்வீட்!!


MI-க்கு எதிராக CSK தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. CSK-வுக்கு எதிராக நல்ல ரெகார்டைக் கொண்டிருக்கும் ஒரே அணி MI மட்டும்தான். இந்த தோல்வியுடன், MI, 2013-க்குப் பிறகு, சீசனில் தனது அனைத்து முதல் போட்டிகளிலும் தோற்றுள்ளது.


“நாம் போதுமான பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம், எனினும், களத்தில் செல்லும்போது நிலைமைகளை மதிப்பிட்டு, நாம் அதற்கேற்ப ஆட வேண்டும். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சரியான நீளத்தைப் பற்றி அறிந்துகொள்ள எங்களுக்கு சற்று நேரம் எடுத்தது. இந்த போட்டியில் ஏராளமான நேர்மறை விஷயங்கள் உள்ளன. ஆனால் இன்னும் மேம்படுத்த நிறைய பகுதிகளும் பல உள்ளன.


இரண்டாவது பாதியில், பனி நிலைகொள்ளும் வரை கொஞ்சம் அசைவு உள்ளது. நீங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காவிட்டால், உங்களுக்கு ஆட்டத்தில் ஆதிக்கம் கிடைத்துவிடும். ராயுடு ஃபாஃபுடன் ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப்பை மேற்கொண்டார். எங்கள் அணியில் பலர் சீக்கிரமாக ஓய்வு பெற்று விட்டதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆரோக்கிய குறைப்பாடும் இல்லை. அனுபவம் பலனளிக்கிறது, எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்," என்று தோனி போட்டிக்குப் பிறகு கூறினார்.



குயின்டன் டி கோக் (33), கேப்டன் ரோஹித் சர்மா (12) ஆகியோரிடமிருந்து கிடைத்த வலுவான தொடக்கத்தை மும்பையால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.


ரவீந்திர ஜடேஜா ஓவரில் சவுரப் திவாரி (42) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (14) ஆகியோரின் விக்கெட்டுகள் விழ ட்யூ பிளெசியின் அபார கேட்சுகள் உதவின.


தென்னாப்பிரிக்காவின் லுங்கி என்ஜிடி ஆபத்தான கீரோன் பொல்லார்ட் (18) உட்பட மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை கடைசி ஆறு ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆறு விக்கெட்டுகளையும் இழந்தது.


மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை ஆரம்பத்தில் இரு தொடக்க வீரர்களையும் இழந்தது. ஆனால் ராயுடு தனது அபாரமான ஆட்டத்தால் இலக்கை எளிதாக்கினார். அதே நேரத்தில் ட்யு பிளெசிஸ் வெற்றி கிடைக்கும் வரை நின்று ஆடி, அணியை இல்லக்கை எட்ட வைத்தார்.


இந்த வெற்றியுடன், IPL போட்டிகளில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தல தோனி (Thala Dhoni) பெற்றார்.  


ALSO READ: LIVE MI vs CSK: IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தோனி படை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR