புதுடெல்லி: ஐபிஎல் 2020 இல் (IPL 2020) மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆட்டம் இந்த ஆண்டு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னரும் CSK பிளேஆஃப்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மும்பை இந்தியன்ஸை (MI) வீழ்த்திய பிறகு, பிளேஆஃப்களில் சென்னையின் வாய்ப்புகள் முடிந்துவிட்டன. IPL வரலாற்றில் இந்த முறைதான் முதல் தடவையாக சென்னை அணி பிளேஆஃப்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.எஸ். தோனியின் (MS Dhoni) அணியின் ஆட்டம் குறித்து அணியின் அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர், ஆனால் அவர்கள் இந்த அணியையும் வீரர்களையும் விட்டுவிடவில்லை. இன்னும் அணிக்கு தங்கள் முழு ஆதரவையும் ரசிகர்கள் அளித்து வருகிறார்கள். இதற்கிடையில், தோனியின் மனைவி சாக்ஷி தோனி (Sakshi Dhoni), இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். CSK பிளேஆஃப்களில் ஆட முடியாத நிலை குறித்து அவர் இந்த இடுகையை வெளியிட்டுள்ளார். சாக்ஷி மிகவும் உணர்ச்சிகரமான ஒரு கவிதையை எழுதியுள்ளார். அவர் சென்னை அணியை வெற்றிபெற்ற அணி என்று அக்கவிதையில் அழைத்துள்ளார். அந்த அணி எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சூப்பர் கிங்காக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



ALSO READ: IPL 2020: மூன்று தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வெற்றிகொண்டது CSK


அவர் 'இது ஒரு விளையாட்டுதான். நாம் சிலவற்றில் வெல்கிறோம், சிலவற்றில் தோற்கிறோம். நாம் அடைந்த சுவாரஸ்யமான வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் கடந்து போன ஆண்டுகள் சாட்சிகளாக உள்ளன. சிலர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலரது மனம் வருத்தத்தில் உள்ளது’ என்று அவர் எழுதியுள்ளார்.


‘சிலர் வெற்றி காண்கிறார்கள், சிலர் தோற்றார்கள், சிலர் பெறுகிறார்கள், சிலர் இழக்கிறார்கள். இது ஒரு விளையாட்டுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பல மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள்!! நம் உணர்ச்சிகள் விளையாட்டின் சாரத்தை தோற்கடித்துவிடக் கூடாது. இது ஒரு விளையாட்டுதான்! வாழ்க்கையல்ல!! யாரும் வேண்டுமென்றே தோற்பதில்லை, ஆனால் எல்லோராலும் வெற்றி பெற முடியாது.’ 


“தோல்வியுற்று, பட்டியலில் கீழே விழுந்ததால், மைதானத்தை விட்டு செல்வது கடினமாக உள்ளது. தோல்வியின் குரலும், பெருமூச்சும், காதில் கேட்கிறது, வலியை அதிகரிக்கிறது. உள் வலிமையால் கட்டுப்பாட்டை மீண்டும் பிடிக்க வேண்டிய தருணம் இது. இது ஒரு விளையாட்டு தான்!!


நீங்கள் வெற்றியாளராக இருந்தீர்கள், இப்போதும் நீங்கள் தான் வெற்றியாளர்! உண்மையான வீரர்கள் பிறப்பது சவால்களை சந்தித்து சண்டையிட! எங்கள் மனதிலும் இதயத்திலும் நீங்கள் என்றும் எங்கள் Super Kings-தான்’ என்று சாக்ஷி தோனி எழுதியுள்ளார். 


ALSO READ: கிங்ஸ் லெவனின் வெற்றிக்கு பறக்கம் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR