தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) சீசனில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் சனிக்கிழமை (செப்டம்பர் 26) சுரேஷ் ரெய்னா CSK அணிக்கு திரும்ப மாட்டார் என்றும், ஆனால் CSK ரசிகர்கள் விரைவில் மகிழ்வதற்கான தருணங்கள் வரவிருக்கின்றன என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"சுரேஷ் ரெய்னா (Suresh Raina) தன்னை மற்ற பல விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால், நாம் அவரை எதிர்பார்க்க முடியாது. அவருடைய முடிவையும் அவரது தனிப்பட்ட கருத்துகளையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் அதைப் பற்றி தற்போது சிந்திக்கவில்லை" என்று விஸ்வநாதன் ANI இடம் கூறினார்.


"CSK அணி வலுவாக ஆட்டத்தில் திரும்பும் என்று ரசிகர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இது ஒரு விளையாட்டு. இதில் சில நாட்கள் நமக்கு சாதகமாக இருக்கும், சில நாட்கள் அப்படி இருக்காது. ஆனால் வீரர்களுக்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நன்றாகத் தெரியும். ஆகையால், ரசிகர்களின் புன்னகை மீண்டும் திரும்பும்” என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ: IPL 2020: CSK ‘சின்ன தல’-ய பெருசா miss பண்ணுவாங்க – Dean Jones!!


சுரேஷ் ரெய்னா பல ஆண்டுகளாக CSK-வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். IPL வரலாற்றில் அதிக ரன்கள் பெற்ற வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. CSK அணியுடன் IPL-ல் பங்கேற்க ரெய்னா ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு (UAE) சென்றார். ஆனால் அவர் மாமா கொலை செய்யப்பட்ட பின்னர் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் இந்தியா திரும்பினார்.


Delhi Capitals-சுக்கு எதிராக CSK-வின் படுதோல்விக்குப் பிறகு, CSK கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) பேட்டிங்கில் போதிய உறுதி இல்லாததை ஒப்புக் கொண்டார்.


"பேட்டிங்கில் எங்களுக்கு போதிய வலிமையும் உறுதியும் குறைகிறது. இது கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற மெதுவான துவக்கங்களால், அழுத்தம் அதிகரிப்பதுடன் ரன் ரேட்டும் பெருகிக் கொண்டே இருக்கிறது. அதை நாங்கள் சரி செய்ய வேண்டும். நாங்கள் ஒரு தெளிவான திட்டத்துடன் திரும்பி வர வேண்டும். நாங்கள் சரி செய்ய வேண்டிய இடங்கள், விஷயங்கள் பல உள்ளன. இன்னும் ஒரு போட்டிக்குள் நாங்கள் இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும். வீரர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்று தோனி கூறினார்.


CSK, IPL 2020 இல் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இப்போது புள்ளிகள் அட்டவணையில் CSK ஐந்தாவது இடத்தில் உள்ளது.


ALSO READ: ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா? இனி CSK அணிக்காக ஆட மாட்டார் சின்ன தல சுரேஷ் ரெய்னா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR