புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், BCCI இப்போதைக்கு IPL 2021-ஐ நிறுத்தி வைத்துள்ளது. தொற்று பரவல் குறையாவிட்டால், இந்த ஆண்டு IPL நடப்பது கூட சந்தேகம்தான் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IPL-இல் பல்வேறு அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது IPL நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பெரிய செய்தி வெளிவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த வீரர்கள்


IPL-2021 ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஒரு பெரிய விஷயம் பற்றி தெரிய வந்துள்ளது. இந்த IPL போட்டிகளுக்கு முன்னர், வீரர்கள், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IPL போட்டிகள் துவங்கிய பின்னர் ஒருவர் ஒருவராக பல வீரர்களும் அணி உருப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


ஒரு ஊடக அறிக்கையின் படி, அனைத்து அணி நிர்வாகமும் IPL போட்டிக்கு முன்னர், தங்கள் வீரர்களையும், அணி உறுப்பினர்களையும் தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், பல வீர்ரகள் இதற்கு சம்மதிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போதுமான விழிப்புணர்வு இல்லாததால் வீரர்கள் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என அணிகளின் நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: Breaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று


வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்த காரணம் இதுதான்


இரண்டு அணி உரிமையாளர்களால் மட்டுமே தங்கள் அணி வீரர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதிக்க வைக்க முடிந்தது என்றும் மற்ற அணி நிர்வாகங்களால் அது முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என்று வீரர்கள் அஞ்சினர் என்றும் அறிக்கையில் கூறப்படுட்டுள்ளது. உயிர் குமிழில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீரர்கள் நம்பினர். ஆகையால் யாருக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் சட்ட காரணங்களால் இது சாத்தியமில்லாமல் போனதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. 


IPL-ஐயும் விட்டு வைக்கவில்லை கொரோனா வைரஸ்


பல அணிகளில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவே IPL 2021-ஐ தற்காலிகமாக நிறுத்துவதாக BCCI உடனடியாக அறிவித்தது. IPL பயோ பபிளின் உள்ளும் கொரோனா தொற்றால் ஊடுருவ முடிந்ததால், இதன் பரவல் அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் BCCI இந்த முடிவை எடுத்தது. ஐபிஎல் நிர்வாக சபை மற்றும் பிசிசிஐ ஆகியவற்றின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ALSO READ: இந்த ஆண்டு IPL நடைபெறுமா? Rajasthan Royals உரிமையாளர் பகீர் தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR