மீண்டும் நடக்கிறதா IPL 2021? மீதமுள்ள போட்டிகளை இங்கு நடத்த BCCI முயற்சி!!
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
லண்டன்: கொரோனா வைரஸ் காரணமாக IPL 2021 போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சில அணிகளின் வீர்ரகள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று எற்பட்டதால், போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது. IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஊடக அறிக்கையின் படி, டெஸ்ட் தொடரின் அட்டவணையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ (BCCI) விரும்புகிறது. அப்படி செய்தால் IPL 2021-ஐ நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை இந்தியா இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: England Tour: மே 19 முதல் இந்திய கிரிக்கெட் அணி Bio-bubble தனிமைப்படுத்தலுக்கு செல்கிறது
பி.சி.சி.ஐ ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது
ஐபிஎல் 2021 இன் மீதமுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டால், அதன் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பது பிசிசிஐக்கு தெரியும். எனவே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் இலங்கையில் போட்டிகளை நடத்துவது குறித்தும் BCCI சிந்தித்து வருகிறது. டி 20 2021 உலகக் கோப்பையை இந்தியாவிலேயே நடத்தவும், IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தவும் பிசிசிஐ முயற்சிக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி செப்டம்பர் வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்
நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தை இந்தியா இங்கிலாந்தில்தான் (England) விளையாடவுள்ளது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடவுள்ளது. ஆகையால், IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகளை இங்கிலாந்திலேயே நடத்த BCCI முயற்சிப்பதற்கான மிகப்பெரிய காரணங்களும் இவைதான். இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை கூறப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR