IPL 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், அனைத்து அணிகளும் வெகு தீவிரமாக போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. முதல் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 10 ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த IPL-ல் சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது. ஆகையால், இந்த ஆண்டு அணியின் வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருகிறார்கள். இதற்கிடையில், சென்னைக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அணி வீரர்களுக்கு இடையில் ஒரு உற்சாகமான உரையை ஆற்றினார். இந்தியாவிற்கு வந்து தனிமைப்படுத்தலில் இருந்த பாண்டிங், இந்த வார தொடக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்ந்தார்.


ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) ஆற்றிய உரையில், அவர், அணுகுமுறை, முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கவனிப்பு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைப் பற்றி வலியுறுத்தினார். மேலும் தொடர் முழுவதும் வீரர்கள் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறினார். 



பாண்டிங் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பந்திடம், இது அவரது அணி என்றும், கடந்தவற்றை மறந்து இப்போது அனைவரும் புதிதாகத் தொடங்க வெண்டும் என்றும் கூறினார். சென்ற ஆண்டு IPL-ல் டெல்லி அணி இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்சிடம் தோல்வியுற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது. 


ALSO READ: IPL 2021: சின்ன தல சுரேஷ் ரெய்னா சீறிப்பாய்ந்தால், CSK-வை யாராலும் நிறுத்த முடியாது: Aakash Chopra


தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், IPL 2021-க்கு முன்னதாக ரிஷப் பந்த் டெல்லி கேப்பிடல்சின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.


"சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டெல்லி அணி அல்ல இது. இது வித்தியாசமான புதிய அணி. இதற்கு நான் காரணம் அல்ல, வீரர்களாகிய நீங்கள்தான் காரணம். இது உங்கள் அணி.... புதிய தலைவர் ரிஷப் பந்த், இது உங்கள் அணி....” என்று பாண்டிங் ஒரு வீடியோவில் கூறியுள்ளார். 


"எனது பயிற்சியின் அடிப்படை மிகவும் எளிமையான ஒன்றுதான். நீங்கள் சரியான அணுகுமுறையுடன் வாருங்கள், பயிற்சியில் ஈடுபடுங்கள், அர்ப்பணிப்பைக் காட்டுங்கள், வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். இதுதான் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நம்முடைய தாரக மந்திரமாக இருக்கப்போகின்றது” என்றார் ரிக்கி பாண்டிங். 


டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது மும்பையில் பயிற்சி எடுத்து வருகிறது. தங்களுடைய முதல் நான்கு போட்டிகளை DC இங்கு விளையாடும்.


ALSO READ: உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR