உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh

2011 ஆம் ஆண்டில் இந்தியா தனது இரண்டாவது கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்திய மக்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த அற்புதமான வெற்றியின் 10 ஆண்டு நிறைவு விழாவை இன்று (ஏப்ரல் 2) கொண்டாடுகின்றனர்.

Written by - ZEE Bureau | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2021, 02:21 PM IST
  • இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியின் 10 ஆண்டுகள் நிறைவடைந்தன.
  • கிரிக்கெட் ரசிகர்களும் வீரர்களும் உலகக் கோப்பை வெற்றியை நினைத்து மகிழ்ச்சி.
  • யுவ்ராஜ் சிங் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிடார்.
உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh

2011 ஆம் ஆண்டில் இந்தியா தனது இரண்டாவது கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இந்திய மக்களும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த அற்புதமான வெற்றியின் 10 ஆண்டு நிறைவு விழாவை இன்று (ஏப்ரல் 2) கொண்டாடுகின்றனர். உலகக் கோப்பையின் அந்த வெற்றியின் காட்சிகள் இன்னும் அனைவரது கண்முன்னாலும் அப்படியே இருக்கிறது. 

இந்த உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய யுவ்ராஜ் சிங், தான் பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில் இது பற்றி பேசியுள்ளார். தனது இறுதி 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின் டெண்டுல்கருக்காக அந்த உலகக் கோப்பை தொடரை வெல்ல தாங்கள் உறுதியாக இருந்ததாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 

“உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்கள் ஓடிவிட்டன. தனது கடைசி உலகக் கோப்பையை ஆடிக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கருக்காக (Sachin Tendulkar) அந்த போட்டியை வெல்ல அனைவரும் முழு முனைப்புடன் இருந்தனர்.” என்று யுவராஜ் சிங் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.

ALSO READ: Road safety world series 2021: தந்தை சச்சினின் வெற்றியை குதூகலமாய் கொண்டாடிய மகள் சாரா டெண்டுலகர்

COVID-19 க்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக சச்சின் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள நாளில் யுவ்ராஜின் இந்த செய்தியும் வந்துள்ளது. கடந்த வாரம் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

"இன்று எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாள். எங்கள் உலகக் கோப்பை வெற்றியின் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எங்கள் அணியின் அனைத்து வீரர்களுடனும் நான் இந்த வீடியோவை உருவாக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சச்சின், யூசுப் மற்றும் இர்பான் ஆகியோர் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமைடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் யுவ்ராஜ் ஒரு அங்கமாக இருந்தார். டெண்டுல்கர் உட்பட இதில் பங்குகொண்ட மூன்று கிரிக்கெட் வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

யுவராஜ் 2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்த தொடரில் 362 ரன்கள் எடுத்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

"நாங்கள் உலகக் கோப்பையை இந்தியாவில் வெல்ல விரும்பினோம். அது எங்களுக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இறுதிப் போட்டியில், எம்.எஸ் தோனி, தொடர் முழுவதும் கவுதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாகின் தொடக்க ஆட்டங்கள், ஜகீர் கானின் அற்புதமான பந்து வீச்சு என அந்த தொடர் முழுவதும் பலர் அபாரமாக ஆடினார்கள்.” என்று அணிக்கு புகழாரம் சூட்டினார் யுவ்ராஜ் சிங் (Yuvraj Singh). 

"இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்றது ஒரு விசேஷமான தருணமாகும்." என்று யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். உலகக் கோப்பை முடிந்தவுடனேயே யுவ்ராஜ் சிங்குக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News