IPL 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற போதும், அதன் பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் CSK அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி, ஏற்கனவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் IPL-லிலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்ற கேள்விகள் அவ்வப்போது எழும்பிக்கொண்டு இருக்கின்றன. CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் 2022 ஆம் ஆண்டின் CSK போட்டிகளிலும் தோனியே அணியை வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், தோனிக்குப் பிறகு யார் என்ற கேள்வி அவ்வப்போது கேட்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரகயான் ஓஜா, அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது உள்ள கேன் வில்லியம்சன் பெயரை அவர் எடுத்துள்ளார். SRH அணியால் பயன்படுத்தப்படாமல் உள்ள கேன் வில்லியம்சன் தோனிக்குப் பிறகு அவருக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார் என அவர் எண்ணுவதாகக் கூறியுள்ளார். தோனிக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாதான் CSK அணியின் கேப்டனாக இருப்பார் என்ற ஊகம் உள்ள நிலையிலும், ஜடேஜா துணை கேப்டனாக இருப்பார் என்றே ஓஜா கருதுகிறார். 


"அவர் (ரவீந்திர ஜடேஜா) துணை கேப்டனாக இருக்கக்கூடும். அவர் எப்போது வேண்டுமானாலும் உதவியாக இருக்கக்கூடிய நல்ல வீரர். ஆனால், கேப்டனைப் பற்றி பேசினால், அதற்கான தகுதி படைத்தவர் ஒருவர்தான், கேன் வில்லியம்சன். அவரை SRH அணி சரியாக பயன்படுத்தவில்லை. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ளது. எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றால், இந்த கேள்விக்கான இடமே இருக்காது. இருப்பினும், அவர் விளையாடவில்லை என்றால், கேன் வில்லியம்சன் CSK அணிக்கு ஒரு நல்ல கேப்டனாக இருப்பார்.” என்று ஐபிஎல் கவர்னிங் குழு உறுப்பினரான ஓஜா, கிரிக்பஸ் வலைத்தளத்துடனான உரையாடலில் கூறினார்.


ALSO READ: IPL 2021: CSK vs SRH: சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


புதன்கிழமை (ஏப்ரல் 28) நடந்த போட்டியில், CSK-வுக்கு எதிராக, வில்லியம்சன் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் SRH அணியால் 171/3 என்ற ஸ்கோரையே எட்ட முடிந்தது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் CSK SRH அணியை தோற்கடித்து முதலிடத்துக்கு முன்னேறியது. IPL 2021-ல் தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடிக்கொண்டிருக்கும் CSK அணி, இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஐது போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


“கடந்த 8-10 ஆண்டுகளாக நாங்கள் அடிக்கடி வீரர்களை மாற்றுவதில்லை. ஏனெனில், எங்களுடன் நீண்ட நாட்களாக ஆடும் வீரர்களுக்கே எங்கள் அணுகுமுறையை நன்றாக புரிந்துகொள்ள முடியும். வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அணியில் இலக்கு, நோக்கம் ஆகியவற்றுடன் வீரர்களின் கண்ணோட்டமும் முழுமையாக ஒத்திசைந்து உள்ளது. வாய்ப்பு கிடைக்காவிட்டால், யாரும் சோர்ந்து போவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை நிரூபிக்க தயாராக காத்திருக்கிறார்கள். அதுதான் இந்த அணியின் பலமாக உள்ளது" என்று வெற்றிக்குப் பிறகு கூறினார் தோனி.


ALSO READ: Watch Video: வைரல் ஆகும் 'ராக்ஸ்டார் பிராவோ' வின் கொரோனா விழிப்புணர்வு பாடல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR