Master வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னரின் டான்ஸ் வீடியோ வைரல்

நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம் ஆடி இருப்பது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 13, 2021, 12:14 AM IST
  • ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டான்ஸ்
  • ஏராளமான டிக்டோக் வீடியோக்களைப் பதிவேற்றியவர் வார்னர்
  • ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் என பலரும் இதே பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர்
Master வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னரின் டான்ஸ் வீடியோ வைரல் title=

நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம் ஆடி இருப்பது சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் டேவிட் வார்னர் (David Warner), தனது குடும்பத்தினருடன் ஏராளமான டிக்டோக் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். இந்திய பாடல்கள் (Songs) மற்றும் திரைப்படங்களின் மீது அவருக்கு ஈர்ப்பு உண்டு.

அல்லு அர்ஜுன் நடித்த ஆலா வைகுந்தபுர்ரமுலூவின் “புட்ட போம்மா” பாடலுக்கு நடனமாடிய வார்னர் மற்றும் அவரது மனைவி கேண்டீஸ் வீடியோ ஒன்று வைரலாகியது நினைவிருக்கலாம்.

தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. கொரோனா பரவலுக்குப் பிறகு வெளியான படங்களில் சூப்பர் கலெக்‌ஷன் அடித்தப் திரைப்படம் ’மாஸ்டர்’. 

Also Read | டிக்டோக் வீடியோவில் பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்...வைரல் வீடியோ

இந்த திரைப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஆனது. படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில், கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் என பலரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். தற்போது ஐபிஎல் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அவரது அணி வீரர்களுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 

Also Read | SRH கேப்டன் இந்த ஐபிஎல்லில் செய்யப்போகும் சாதனைகள் என்ன?

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News