புதுடெல்லி: ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து கிரிக்கெட் வீரர்கள் மெதுவாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஸை அடைகின்றனர். இந்த முறை கோப்பைக்கான போர் கடுமையாக இருக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (Royal Challengers Bangalore) நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது வயது மற்றும் உடற்தகுதி குறித்து ஆச்சரியம் தரும் தகவலை சொல்லி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.



 
அப்படி என்ன தான் சொன்னார் 37 வயதான டிவில்லியர்ஸ்?


தான் வயதானவன் என்று புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டார்.  கிரிக்கெட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தவரை தன்னை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று சொன்னார். 


ALSO READ | கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுகிறாரா?


தன்னுடைய உடற்தகுதியை விட டிவில்லியர்ஸின் உடற்தகுதி சிறப்பாக இருப்பதாக கோஹ்லி பலமுறை கூறியுள்ளார். இந்த வயதில், டிவில்லியர்ஸ் விளையாடக்கூடிய ஷாட்களை இந்த வயதில் தன்னால் விளையாட முடியாது என்று கோஹ்லி கூறியிருந்தார்.


37 வயதான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணிக்காக விளையாடுகிறார். அவர் தற்போது ஐபிஎல்லில் கலந்துக் கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துவிட்டார்.  


தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் டிவில்லியர்ஸ். அணியினரின் பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்றை ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டிவில்லியர்ஸ் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்ப முயற்சிப்பது காட்டப்பட்டுள்ளது. மைதானம் சற்று ஈரமாக இருந்ததால் பந்தை கையாளவது மிகவும் கடினமாக இருந்தது என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.



பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசுகிறார்கள், ஆனால், இங்கு நிலவும் ஈரபப்தமான சூழலால், நாம் கடும் முயற்சி செய்ய வேண்டும். உடல் எடையை குறைப்பது நல்லது, ஆனால் என்னைப் போன்ற வயதானவன் கடுமையான முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  


பயோ பபிள் பாதுகாப்பு வளையத்திற்குள் ஐபிஎல் வீரர்கள் இருந்தபோதும், சிலருக்கு கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டது. எனவே ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்  ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.


Also Read | இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட இப்போது வாய்ப்பே இல்லை"


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR