இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021க்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) விக்கெட் கீப்பருமான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், ஐபிஎல் 2022-ல் டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 லீக்கிற்குத் திரும்ப உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்திய அணிக்கு விளையாட தகுதியற்ற 5 வீரர்கள்...!


விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஆர்சிபி அணி புதிய கேப்டனை அறிவிக்கப் போவது மட்டுமல்லாமல், டி வில்லியர்ஸை ஆர்சிபி அணியின் ஆலோசகராக நியமிக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2021க்குப் பிறகு விராட் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, டி வில்லியர்ஸை பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக சேருமாறு கோஹ்லி கேட்டுக் கொண்டார்.



டி வில்லியர்ஸ் கடந்த சீசனில் 15 போட்டிகளில் 2 அரைசதங்கள் மற்றும் 148.34 ஸ்ட்ரைக் ரேட்களுடன் 313 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் அவரது ஐபிஎல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக, 184 ஆட்டங்களில் 39.7 சராசரியுடன் 3 சதங்கள் மற்றும் 40 அரைசதங்களுடன் 151.68 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 5,162 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2022க்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது.  இதற்காக மார்ச் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு ஆர்சிபி அழைப்பு விடுத்துள்ளது.  


 



ஐபிஎல் 2022 ஆர்சிபி முழு அணி: விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் பட்டேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், மஹிபால் லோம்ரோர், ஷேர்ஃபா ஆலன், ஃபின்சன் ரூதர் பெஹ்ரன்டோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிந்த், அனீஷ்வர் கவுதம், கர்ண் ஷர்மா, டேவிட் வில்லி, லுவ்னித் சிசோடியா, சித்தார்த் கவுல்


மேலும் படிக்க | வார்னே ஒன்றும் சிறந்த பவுலர் இல்லை: இந்திய முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR