பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 ஏலம் சம்பந்தமாக 10 அணிகளும் பின்பற்ற வேண்டிய சில கட்டாய விதிகளை பிசிசிஐ வகுத்துள்ளது.  இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 சீசனுக்கு முன்னதாக மெகா ஏலத்தை சுமூகமாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பல வழிகளை பின்பற்றி வருகிறது.  பெங்களூரில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் உட்பட 10 உரிமையாளர்கள் தங்கள் அணிகளை உருவாக்க உள்ளனர்.  இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பயோ பபிள் முறையில் ஏலம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | 'எம்எஸ் தோனி என் மனைவி அல்ல': ஹர்பஜன் சிங் காட்டம்!


ஐபிஎல் 2022 ஏலத்தில் அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டிய விதிகள்: 


* ஐபிஎல் 2022 ஏலம் பயோ பபிளில் நடைபெறும்.


* பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், உரிமையாளர்களுடன் வருபவர்கள் கோவிட்-19 நெகடிவ் RT-PCR சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.  BCCI- அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனம் மூலம் சோதனை நடத்தப்படும்.


* இந்த ஏலத்தில் அணிக்கு ரைட் டு மேட்ச் (RTM) விருப்பம் இருக்காது.


* பழைய எட்டு ஐபிஎல் அணிகளால் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.  இதன் மூலம் அனைத்து அணிகளும் ஒரு புள்ளியில் இருந்தே ஏலத்தை தொடங்கும்.  


* ஐபிஎல் 2022 மொத்த ஏலத்தொகை ரூ.80 கோடியில் இருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வீரர்களை அணியில் எடுக்க இந்த தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 


* கடந்த 15 நாட்களில் வெளிநாட்டுப் பயணங்கள் செய்த பிறகு இந்தியா திரும்பியவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  



* பிப்ரவரி 11 அன்று ஹோட்டலுக்கு வருபவம் அணி உரிமையாளர்களை பிசிசிஐ உன்னிப்பாகக் கண்காணிக்கும். அவர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர்.


* பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 2022 ஏலத்தை சுமூகமாக நடத்துவதற்காக  காலை 12 மணி முதல் 7 மணி வரை சோதனை நடத்தப்படும். 


* பங்கேற்பாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களின் முழு விவரங்களையும் பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


* ஏலம் நடைபெறும் இடத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.


ALSO READ | 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல்லுக்கு திரும்பும் இந்திய வீரர்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR