9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல்லுக்கு திரும்பும் இந்திய வீரர்..!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் தொடரில் வீரர்களுக்கான ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீசாந்தை எந்த அணி வாங்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2022, 04:52 PM IST
  • ஐ.பி.எல் போட்டிக்கு திரும்பும் ஸ்ரீசாந்த்
  • 9 ஆண்டுக்களுக்குப் பிறகு ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்
  • ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல்லுக்கு திரும்பும் இந்திய வீரர்..! title=

ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் இந்த மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 590 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி வென்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை அணிகளில் இடம்பிடித்திருந்த அவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். 

ALSO READ | IPL2022 நடைபெறும் இடம் குறித்து கசிந்த தகவல்..!

சூதாட்ட புகார்

ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2013 ஆம் ஆண்டில் சூதாட்ட புகாரில் சிக்கினார். ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ஸ்ரீசாந்த் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வாழ்நாள் தடையை ரத்து செய்து, 7 ஆண்டுகளாக குறைத்தது. தடைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

உலகக்கோப்பை

2007 ஆம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் 20 ஓவர் உலகக்கோப்பை வென்று சரித்திரம் படைத்த அணியில் ஸ்ரீசாந்தும் இடம்பிடித்திருந்தார். அந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இதேபோல், 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற 50 ஓவர் உலக்கோப்பை அணியிலும் இடம்பிடித்திருந்தார். 

ALSO READ | பிரெட்லீ பந்துவீச பயந்த இந்திய ஜாம்பவான்..!

ஐ.பி.எல் ஏலம்

2 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீசாந்த் தடை முடிவுக்கு வந்தது. இதனால் 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனால், அப்போது அவருடைய பெயரை பிசிசிஐ நீக்கியது. இந்தமுறை ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ள அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் களமிறங்கும் இந்த ஐ.பி.எல் போட்டியில் ஏதேனும் ஒரு அணி தன்னை ஏலம் எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News