IPL2022: மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்..!
ஐ.பி.எல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 வீரர்களை டார்கெட் செய்து ஏலத்தில் எடுக்க உள்ளது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித், பும்ரா, பொல்லார்டு மற்றும் சூரியக்குமார் யாதவை தக்க வைத்துள்ளது. இஷான் கிஷன், ஹர்திக், குருணால் சகோதரர்கள், போல்ட் ஆகியோரை விடுவித்துள்ளது. விரைவில் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் சில வீரர்களை டார்க்கெட் செய்து அவர்களை அணிக்குள் கொண்டு வர மும்பை திட்டமிட்டுள்ளது. மும்பை கைவசம் 48 கோடி ரூபாய் உள்ளது.
இஷான் கிஷன்
மும்பை இந்தியன்ஸ் அணி இவரை விடுவித்தாலும், ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதிரடி ஆட்டக்காரர் மற்றும் கீப்பராகவும் இஷான் செயல்படுவார் என்பதால், அவரை மும்பை குறி வைத்துள்ளது. கடந்த ஆண்டு போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். ஓபனிங் மற்றும் மிடில் வரிசையில் பேட் செய்யக்கூடியவர் இஷான் கிஷன். அவரை இழக்க மும்பை தயாராக இல்லை.
ALSO READ | ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா?
குயின்டன் டி காக்
மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், ஏலத்தின் மூலம் மும்பை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இஷான் கிஷனைப் போல ஓபனிங் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக டிகாக் செயல்படுவார். இதுவரை 77 ஐபில் போட்டிகளில் விளையாடி 2256 ரன்களை எடுத்துள்ளார். மும்பை அணியின் டார்க்கெட் விலைக்குள் சிக்கினால், டிகாக் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பில்லை.
தேவ்தத் படிக்கல்
இடது வலது ஓபனிங் பேட்ஸ்மேன் காம்பிஷேனை மும்பை இதுநாள் வரை வைத்திருந்தது. இப்போது டிகாக் ஏலத்தில் இருப்பதால், அவர் கிடைக்காதபட்சத்தில் படிக்கல்லை ஏலம் எடுக்க மும்பை அணி முயலும். ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேனாக இருந்த படிக்கல், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். 21 வயதாகும் அவர் இதுவரை 1 சதம் மற்றும் 6 அரைசதங்களை விளாசியுள்ளார்.
அல்ரவுண்டர்
மும்பை அணியின் ஆல்ரவுண்டர் டார்கெட்டில் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டராக இருந்த ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கு சரியான மாற்று வீரரை கொண்டுவர மும்பை திட்டமிட்டுள்ளது.
ALSO READ | IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்
பந்துவீச்சாளர்கள்
வேகபந்துவீச்சாளர்களில் ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா மற்றும் போல்ட் ஆகியோரையும், மும்பை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹரையும் மும்பை குறி வைக்க உள்ளது. போல்ட் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் மும்பை அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதால், அவர்கள் ஏலத்தின் மூலம் மும்பை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. ரபாடாவையும் முடிந்தளவுக்கு அணிக்குள் கொண்டுவருவதற்கு மும்பை முயற்சி செய்யும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR