IPL 2022 Edition: அகமதாபாத்தில் நடந்த 89 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் IPL 2022 பதிப்பிலிருந்து 10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு பிசிசிஐ இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும் IPL 2021 தொடருக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய அணிகளுக்கான டெண்டர்கள் மேற்கொள்ள முடியாது என்பதால், 2022 ஆம் வருட முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (International Olympic Committee) நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான ஐ.சி.சி. (ICC) அமைப்பின் முயற்சியை ஆதரிக்க பி.சி.சி.ஐ (BCCI) முடிவு செய்தது.


மேலும், COVID-19 தொற்றுநோயால் கைவிடப்பட்ட உள்நாட்டு போட்டிகள் காரணமாக, அந்த அணிகளை சேர்ந்த முதல் தர வீரர்களுக்கு, அதாவது ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.


ALSO READ | இந்திய கிரிக்கெட் வீரர் நடராசன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்?


பல மாத கால தாமதத்திற்குப் பிறகு, ஜனவரி மாதம் சையத் முஷ்டாக் அலி டி 20 சாம்பியன்ஷிப் போட்டி (Syed Mushtaq Ali T20 championship) மூலம் உள்நாட்டு சீசனை ஆரம்பிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.


உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக வாரியத்தின் துணைத் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


ஐ.சி.சி வாரியத்தில் இயக்குநராக சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தொடர்ந்து இருப்பார் எனவும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, உலக அமைப்பின் தலைமை செயற்குழு கூட்டங்களில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இருப்பார் எனவும் முடிவு செயப்பட்டு உள்ளது.


ALSO READ | IPL Auction-ல் CSK தோனியை retain செய்யக் கூடாது என இவர் கூறுவது ஏன் தெரியுமா?


ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் நடைபெறுவதால், ஒரு மெகா IPL ஏலத்திற்கு மிகக் குறைவான நேரம் இருப்பதாகவும், தற்போதுள்ள அனைத்து உரிமையாளர்களுக்கும் உடன்பட்ட ஒரு சீரான தக்கவைப்புக் கொள்கையைக் கொண்டிருப்பதாகவும் பெரும்பாலான பங்குதாரர்கள் கருதுகின்றனர் என பி.சி.சி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


10 அணிகள் ஐபிஎல் தொடர் என்றால் 94 ஆட்டங்கள் மற்றும் கிட்டத்தட்ட இரண்டரை மாத சாளரம் வேணும். இது சர்வதேச போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். 


ஐ.பி.எல் நடைபெறும் முழு காலத்திற்கும் சிறந்த வெளிநாட்டு வீரர்களின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு 60 போட்டிகளுக்கான ஒளிபரப்பு பணம் செலுத்தப்படுகிறது. அவர்களின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


ALSO READ | IPL 2021: ஒன்பதாவது IPL அணியை வாங்குகிறாரா நடிகர் மோகன்லால்


தற்போதைய நிலவரப்படி, ஸ்டார் இந்தியா 2018-2022 க்கு இடைப்பட்ட காலத்திற்கு, 16,347.50 கோடியை செலுத்துகிறது. தற்போது வரை ஆண்டுக்கு 60 போட்டிகளுக்கு இருக்கிறது. 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR