ஐபிஎல் 2022ன் முக்கிய போட்டியான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் அணியும் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  ஐபிஎல் 2002-ல் குஜராத் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, மேலும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது.  புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு, இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் தான் பிளே ஆப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலையில் விளையாடி வருகிறது.  இதனால் இந்த போட்டி ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம்


மூன்றாவது ஓவரிலேயே குஜராத் அண்ணியின் கில் ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார், பின்பு களமிறங்கினார் மேத்யூ வேட்.  13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார் மேத்யூ வேட்.  பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசினார் மேக்ஸ்வெல்,  அந்த ஓவரில் மேத்யூ வேடிற்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த அம்பயரும் இறுதியில் அவுட் கொடுத்தார். உடனடியாக DRS அப்பீல் செய்தார் மேத்யூ வேட்.  அதில் பந்து பேட்டிற்கு மிக அருகில் சென்றது போல் இருந்தது.  இருப்பினும் பெரிதாக ஸ்பார்க் காட்டாததால் மூன்றாவது அம்பயரும் அவுட் கொடுத்தார்.


 



இதனால் கடுப்பான மேத்யூ வேட் டிரெஸ்சிங் ரூமிற்கு சென்று பேட்டினை வேகமாக தரையில் தூக்கி எறிந்தார், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  அம்பயர் அவுட் கொடுத்ததும், விரக்தி ஆனா மேத்யூ வேடிடம் விராட் கோலி மைதானத்திலேயே தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார்.  இந்த வருட ஐபிஎல் போட்டியில் நடுவரின் தவறான முடிவுகள் பல முறை அரங்கேறியுள்ளது. 



மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR