ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இரு நாட்களுக்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய ஏலத்தில் பல வீரர்களை ₹15 கோடி - ₹10 கோடி என்ற விலையில் விற்கப்பட்டுள்ளனர். அணிகள் தங்களுக்கான விளையாட கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளன. ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இந்த சீசனில் இணைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஐபிஎல் 2022 ஏலத்தில் விற்கப்படாத பிறகு சுரேஷ் ரெய்னா கருத்து இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நம்மிடம் என்ன திறமை உங்களது என்பது நமக்கு நன்றாகவே தெரியும், கிரிக்கெட் நாம் மிகவும் காதலிக்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது.  நான் ஒரு நலல சமையம்காரனாக ஆக விரும்புகிறேன். எனக்கு மிக நன்றாக சமைக்கத் தெரியும் என்றார்.


மேலும் படிக்க |  ஐபிஎல் ஏலம் 2022: அதிக விலைக்கு போன டாப் 10 வீரர்கள்!


“கிரிக்கெட் எனது ஒரே காதல். மேலும் நான் கிரிக்கெட்டில் உறுதியாக இருப்பேன். எனக்கு தெரிந்த விளையாட்டு மற்றும் அரசியல் எனக்கு அதிகம் புரியவில்லை. நான் இப்போது ஒரு நல்ல சமையல்காரராக மாற விரும்புகிறேன், ஒவ்வொரு சமையலையும் நன்றாக சமைத்து, ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பார்க்க விரும்புகிறேன்,” என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.


மேலும் படிக்க | முடிந்தது ஐபிஎல் ஏலம்! ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள் - முழு விவரம்! 


இளம் கிரிக்கெட் வீரர்கள் இப்போது பல்வேறு வகையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்ற அவர் மேலும் கூறுகையில் "இரண்டு-மூன்று தொடர்களுக்குப் பிறகு எதிர்பபர்ப்பு அதிகம் ஆவதால், அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே போல் ஒரு பயிற்சியாளரருக்கு தனது அணியின் எதிர்காலம் குறித்த நீண்ட நாள் திட்டமும் இருக்கும்.  தேர்வாளர்கள் வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்ற  நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கின்றனர். உங்களுக்கு ஐந்து-பத்து போட்டிகள் வழங்கப்படும். இரண்டு அல்லது மூன்று சுற்றுப்பயணங்களில் நீங்கள் அணியுடன் விளையாடும் போது, நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களை மேம்படுத்திக் கொள்ல வாய்ப்புகள் வழங்கப்படும். அது ஒரு கற்றல்  நடைமுறை,” என்று ரெய்னா கூறினார்.


மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் போட்டி வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாட வீரர்கள் பட்டியலில் டாப் 3-ல் இருக்கும் இவரை இந்த ஆண்டு எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து திடீரென வெளியேறிய அவர், இந்த ஆண்டு ஏதேனும் ஒரு அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் எடுக்காததால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR