ஐபிஎல் 2022-ல் விளையாடுகிறாரா சுரேஷ் ரெய்னா? எந்த அணிக்கு தெரியுமா?
சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டி விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், குஜராத் அணி மனது வைக்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான பிளேயராக இருந்த சுரேஷ் ரெய்னாவை அந்த அணி இந்த முறை ஏலத்தில் எடுக்கவில்லை. போதுமான பணம் இருந்து அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் விருப்பம் காட்டாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும், மற்ற அணிகளும் அவரை வாங்க விருப்பம் காட்டாததால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் கருதினர். ஆனால் அவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B
ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் போட்டியில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகுவதாக அறிவித்துள்ளார். குஜராத் அணியால் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு குஜராத் அணிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. தொடக்க வீரராக அவரை இறக்க அணி நிர்வாகம் எண்ணியிருந்த நிலையில், ஜேசன் ராய் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனால் மாற்று வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி தேடிக்கொண்டிருக்கும் நிலையில், ரெய்னாவை பரிசீலிக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சியில் சுரேஷ் ரெய்னா புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, டிவிட்டரில் டிரெண்ட் செய்துள்ள ரசிகர்கள், மிஸ்டர் ஐபிஎல் குஜராத் அணிக்காக விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ரசிகர்களின் கோரிக்கையை குஜராத் அணி பரிசீலிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியில் சுப்மான் கில், முகமது ஷமி, ரஷித்கான் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 5528 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | IPL2022: சோஷியல் மீடியாவில் பாப்புலரான டாப் 3 ஐபிஎல் அணிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR