ஐபிஎல் மினி ஏலம் 2023: அணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 விதிகள்
ஐபிஎல் மினி ஏலம் களைகட்டப்போகும் நிலையில், வீரர்களை வாங்குவதற்கு முன்பு 5 விதிகளை அனைத்து ஐபிஎல் அணிகளும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வந்தாச்சு ஐபிஎல் திருவிழா. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் தடபுடலாக நடைபெற இருக்கிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முதல் 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும் கொச்சியில் முகாமிட்டுள்ளனர். 87 வீரர்கள் மட்டுமே இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து வாங்க முடியும். இதற்கான ஏலப் பட்டியலில் மொட்டம் 405 வீரர்கள் இருக்கின்றனர்.
எந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது? எந்த அணி யாரை வாங்கப்போகிறது என்பதையெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ஏலத்தில் பங்கேற்க இருக்கும் அணிகளுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. 10 அணிகளும் ஒரு வீரரை ஏலம் எடுப்பதற்கு முன்பு முக்கியமான 5 விதிகளை கடைபிடிக்க வேண்டும். இந்த 5 விதிகளுக்குட்பட்டே வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.
ஐபிஎல் மினி ஏலத்தில் 5 முக்கியமான விதிகள்
1. கடந்த சீசனுக்கு மாற்றாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகையானது அணிகளின் இருப்பில் இருக்கும் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
2. பர்ஸில் இருக்கும் மொத்த தொகையில் 75 விழுக்காடு தொகையை அனைத்து அணிகளும் கட்டாயம் செலவழிக்க வேண்டும்.
3. ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு இந்த முறை அனுமதிக்கப்படவில்லை.
4. இந்திய வீரர்களை பொறுத்தவரை 17 முதல் 25 பிளேயர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சமாக 8 பேர் மட்டுமே இருக்க முடியும்.
5. ஆரம்ப சுற்றுகளில் விற்கப்படாமல் போகும் எந்த வீரரையும் அடுத்தடுத்த சுற்றுகளில் வாங்க விரும்பினால், அணிகள் விருப்பம் தெரிவித்து வாங்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ