IPL Mini Auction: ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது. 405 வீரர்களில், 273 பேர் இந்தியர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள், இதில் நான்கு பேர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள். கேப் செய்யப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை 119, கேப் செய்யப்படாத வீரர்கள் 282, அசோசியேட் நாடுகளில் இருந்து 4 பேர் உள்ளனர்.  ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். உரிமையாளர்களின்  கண்களைக் கவர்ந்த சில இளம் வீரர்கள் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஐபிஎல் 2023 ஏலத்தில் உள்ள 5 இளம் வீரர்கள்:


அல்லா முகமது கசன்ஃபர் - 15 வயது


வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் ஏலம் எடுக்கப்படும் இளம் வீரர் ஆப்கானிஸ்தானின் அல்லா முகமது கசன்ஃபர் ஆவார். அவர் ஒரு வலது கை ஆஃப் ஸ்பின்னர்.  காபூலில் நடந்த ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கின் 3 டி20 போட்டிகளில் கசன்ஃபர் 4/15 உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


மேலும் படிக்க | வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா; டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இது போதாது


தினேஷ் பனா - 18 வயது


ஹரியானாவின் தினேஷ் பானா இந்த ஆண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வெல்வதற்கு தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை விளாசினார், மேலும் அந்த போட்டியில்தான் பனா ஹார்ட்-ஹிட்டர் என்று புகழ் பெற்றார். 5 போட்டிகளில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி உள்ளார். இருப்பினும், அதன்பிறகு, பானா கவனிக்கத்தக்க எதையும் செய்யவில்லை: அவர் 8 T20 போட்டிகளில் 110 ஸ்ட்ரைக் ரேட்டில் 14 சராசரியாக இருந்தார். 


சாகிப் ஹுசைன் - 18 வயது 


18 வயதான சாகிப் ஹுசைன் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர்.  அவர் சமீபத்தில் பீகாருக்காக தனது அறிமுகத்தை செய்தார், மேலும் தனது இரண்டாவது SMAT T20 போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஹுசைன் ஆடுகளத்திற்கு வெளியே பந்தை நகர்த்தவும் முடியும் என்பதும் அறியப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஒரு ஈர்ப்பாக உள்ளனர்; சாகிப் ஹுசைனுக்கு சிறந்த எதிர்கால வாய்ப்பு இருப்பதாக உரிமையாளர்கள் கருதுகின்றனர்.  


குமார் குஷாக்ரா - 18 வயது


இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில், ஜார்கண்டின் குமார் குஷாக்ரா, 250-க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த முதல் தர வரலாற்றில் இளைய பேட்டர் என்ற சாதனையை முறியடித்தார். குமார் குஷாக்ரா ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல் 2023 ஏலத்தில் ஏலத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது.


ஷேக் ரஷீத் - 18 வயது


ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷேக் ரஷீத் ஒரு அற்புதமான திறமைசாலி. வலது கை பேட்ஸ்மேன், ரஷீத் தனது ரஞ்சி கோப்பையை பிப்ரவரி 2022ல் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அக்டோபரில் அறிமுகமானார். 3 டி20 ஆட்டங்களில் சராசரி 28 வைத்துள்ளார்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷேக் ரஷீத் இருந்தார்.


மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ