IPL 2023, RCB vs CSK: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023ஆம் ஆண்டுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால், ரசிகர்களை மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். உலகின் மிகப் பிரபலமான மற்றும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக், குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 31 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் போட்டியின், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இருப்பினும், போட்டி அட்டவணை ஒரு சில ரசிகர்களை வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. காரணம் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) இடையே ஒரு போட்டி மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.


அதாவது, ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் குரூப் ஏ பிரிவிலும்; சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், தனது குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா ஒருமுறையும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணியுடன் தலா இரண்டு முறையும் என விளையாட உள்ளன.


மேலும் படிக்க | IPL 2023 Schedule CSK vs GT: ஐபிஎல் 2023 முதல் போட்டியில் சென்னை - குஜராத் 


எனவேதான், ஒரே குரூப்பில் இருக்கும், சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் ஒரே ஒருமுறைதான் லீக் சுற்றில் மோதிக்கொள்ளும். இந்த தொடர், தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், ஆர்சிபியின் விராட் கோலியும், தோனியும் ஒன்றாக ஆடும் கடைசி போட்டியாகவும் இது அமையலாம் என கூறப்படுகிறது. 



பிளே ஆப் சுற்றில் இரண்டு அணிகளும் தேர்வு பெற்றால் மட்டுமே மற்றொரு போட்டிக்கு சிறிதளவு வாய்ப்பு ஏற்படும். இருப்பினும், தோனி - விராட்டை ஒன்றாக மைதானத்தில் பார்த்தே ஆக வேண்டும் என்ற விருப்பம் கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. 


வரும் ஏப். 17ஆம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்த போட்டிக்குதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோலியும் தோனியும் சிறந்த நண்பர்களாக அறியப்படுகின்றனர். தோனி அனைத்து வடிவங்களிலும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோது, அவரது வாரிசாக கோலி தேர்வு செய்யப்பட்டார்.


கோஹ்லியைப் பொறுத்தவரை, தோனி இன்னும் அவருக்கான முக்கிய வழிகாட்டியாக இருக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போது, நீங்கள் அதே பரஸ்பர மரியாதையை பார்க்க முடியும். போட்டிக்கு முன்னும் பின்னும் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அந்த அரவணைப்பு திரையில் பிரதிபலிக்கும். ஏப்ரல் 17ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆர்சிபி vs சிஎஸ்கே, போட்டியை நேரில் பார்த்தே வேண்டிய மிகப்பெரிய போட்டியாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.


மேலும் படிக்க | INDvsAUS: ஆபந்பாந்தவனாக மாறிய அக்சர் - அஸ்வின்..! அதிரடி காட்டும் ஆஸி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ