ஐபிஎல் 2023 தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியும் இறுதிப் போட்டியும் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 18 டபுள் ஹெடர்கள் உட்பட மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளை சொந்த மைதானத்திலும், எஞ்சிய 7 போட்டிகளை வெளியூர் மைதானங்களிலும் விளையாட வேண்டும். இந்த முறை 10 அணிகளின் சொந்த மைதானங்களைத் தவிர தர்மசாலா மற்றும் கவுகாத்தியிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த முறை ஐபிஎல் விளையாடும் அணிகள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | நான் நிச்சயம் இந்த ஆண்டு விளையாடுவேன்! அப்டேட் கொடுத்த சிஎஸ்கே வீரர்!


ஐபிஎல் அணிகள் பிரிவு


குழு ஏ: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 


குழு பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் - அணிகளும் இடம்பெற்றுள்ளன.


ஐபிஎல் நடைபெறும் மைதானங்கள்


அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா 


ஐபிஎல் தேதிகள்



தொடக்கப் போட்டி - மார்ச் 31


கடைசி லீக் ஆட்டம் - மே 21 


இறுதிப் போட்டி - மே 28


ஐபிஎல் 2023-ன் முதல் ஐந்து போட்டிகள்


1. சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - மார்ச் 31.
2. பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைட்ஸ் - ஏப்ரல் 1.
3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - ஏப்ரல் 1.
4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஏப்ரல் 2
5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - ஏப்ரல் 2


மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் இணைந்த மற்றொரு இலங்கை வீரர்! யாருக்கு பதிலாக தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ