இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் துபாயில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. 2 கோடி ரூபாய் பட்டியலில் இருக்கும் வீரர்களிடமிருந்து ஏலம் தொடங்கும். 10 ஐபிஎல் அணிகளும் சேர்த்து 262.95 கோடி ரூபாய் இந்த ஏலத்தில் செலவழிக்க உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மார்ச் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்போதைய எதிர்பார்ப்பு என்னவென்றால் துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த பிளேயர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்பது தான். இந்த பட்டியலில் இருக்கும் டாப் 5 வீரர்களை இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)


ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸூக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையை வென்று அசத்தியது. 30 வயதாகும் பாட் கம்மின்ஸ் 2 கோடி ரூபாய் அடிப்படை விலைப் பட்டியலில் இருக்கிறார். அவருக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மும்பை அணியில் இருந்து வெளியேறினாரா சச்சின்...? உண்மை என்ன?


ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)


ஒரு டைனமிக் பேட்டிங் ஆல்-ரவுண்டராக உயர்ந்திருக்கும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரர், ஒருநாள் உலகக் கோப்பையின் போது மூன்று சதங்கள் விளாசியதுடன், பந்துவீச்சிலும் முத்திரை பதித்தார்.  50 லட்சம் ரூபாய் அடிப்படை விலை நிர்ணயித்திருந்தாலும் அவருக்கு கோடிகள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 


ஹாரி புரூக் (இங்கிலாந்து)


இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பார்மில் இருக்கும் இவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் போட்டிபோடும். 


ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா)


உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் ஐந்து பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். 23 வயதான அவர் ஐபிஎல் தொடரில் அடிப்படை விலையாக ரூ.2 கோடியாக நிர்ணயத்துள்ளார்.


வனிந்து ஹசரங்க (இலங்கை)


இலங்கையின் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, இந்தமுறை ஐபிஎல் ஏலத்துக்கு வந்துள்ளார். அவருக்கு 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க 9 அணிகளும் போட்டிபோட காத்திருக்கின்றன. 


மேலும் படிக்க |  ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த 3 முக்கிய தவறுகள்... யானைக்கும் அடி சறுக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ