IPL 2024 Auction Highlights: ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த பிளேயருக்கு என்ன விலை? அணிகள் வாரியாக விவரம்
IPL 2024 Auction Highlights: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் விறுவிறுப்பு
துபாயில் விறுவிறுப்பாக தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction 22024) முதல் செட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பாவெல் முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். அவரை ஏலம் எடுக்க கொல்கத்தா, ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரோவ்மேன் பாவெலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஏலத்தில் வந்த தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ. 4 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.
டிராவிஸ் ஹெட் ஏலம் எடுக்க போட்டி
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலம் எடுக்க போட்டி போட்டன. முடிவில் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.6.80 கோடிக்கு வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஏலத்துக்கு வந்த இந்திய வீரர் கருண் நாயர், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், மனீஷ் பாண்டே ஆகியோரை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை.
மேலும் படிக்க | IPL 2024: பாட் கம்மின்ஸ் 20 கோடி, டிராவிஸ் ஹெட் 6 கோடி - தெறிக்கவிடும் சன்ரைசர்ஸ்
சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் போட்டி
இலங்கை ஆல்-ரவுண்டர் ஹசரங்காவை அடிப்படை தொகை ரூ.1.50 கோடிக்கே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்தது. நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.80 கோடிக்கு வாங்கியது. அவரை தொடர்ந்து இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4 கோடிக்கு வாங்கியது. ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாயை அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கே குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
பாட் கம்மின்ஸூக்கு அடித்த ஜாக்பாட்
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பாட் கம்மின்ஸை ஏலத்தில் வாங்க மும்பை, சென்னை கடும் போட்டி போட்டது. ரூ.4.80 கோடிக்கு பின் மும்பை கைவிட்ட பின், பெங்களூரு அவரை ஏலம் கேட்க தொடங்கியது. இவர்களுக்கு இடையேவும் கடும் போட்டி இருந்தது. திடீரென ஏலத்தில் புகுந்த சன்ரைசர்ஸ் அணி, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு வாங்கியது. கடந்த ஆண்டு சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஏலம் போனதே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு வீரர் ஏலம் போன தொகையாக இருந்தது. அதனை பேட் கம்மின்ஸ் முறியடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கோட்ஸி
தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம், அவர்களின் ஆல்-ரவுண்டர் வரிசை பலப்பட்டுள்ளது. இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அடுத்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை வாங்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு அவரை வாங்கியது. இரண்டாவது செட்டின் முடிவில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை பஞ்சாப் அணி 4.20 கோடிக்கு வாங்கியது.
மேலும் படிக்க | IPL Business: ஐபிஎல் அணிகள் எங்கிருந்து எவ்வாறு எப்படி பணம் சம்பாதிக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ