IPL 2024: பாட் கம்மின்ஸ் 20 கோடி, டிராவிஸ் ஹெட் 6 கோடி - தெறிக்கவிடும் சன்ரைசர்ஸ்

Pat Cummins IPL bid: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். அவரை 20.50 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2023, 03:05 PM IST
  • பாட் கம்மின்ஸூக்கு அடித்த ஜாக்பாட்
  • 20.50 கோடி கொட்டி கொடுத்தது சன்ரைசர்ஸ்
  • இதுவரை இல்லாத அளவுக்கு அடித்த ஜாக்பாட்
IPL 2024: பாட் கம்மின்ஸ் 20 கோடி, டிராவிஸ் ஹெட் 6 கோடி - தெறிக்கவிடும் சன்ரைசர்ஸ் title=

Sunrisers Hyderabad's Big Buys: துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிளேயரும் பெறாத தொகைக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) பெற்றுள்ளார். அவரை 20.50 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணி ஏலம் எடுத்திருக்கிறது. அத்துடன் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட்டையும் சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஐபிஎல் ஏலம் 2024 

துபாயில் ஐபிஎல் ஏலம் 2024 கோகோ கோலா அரங்கில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுதான் முதன்முறையாகும். அத்துடன் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறும் முதல் ஐபிஎல் ஏலமாகவும் இது அமைந்தது. கொல்கத்தா அணிக்கு சென்றிருக்கும் கவுதம் காம்பீர், டெல்லி அணியின் வீரர் ரிஷப் பன்ட் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்க நேரடியாக வந்திருந்தனர். 

மேலும் படிக்க - LIVE | IPL 2024 Auction Updates : தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்... கோடிகளில் புரளப்போவது யார் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

ஏலம் தொடங்கியது முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் ஆக்டிவாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பெயர் வந்ததும் அவரை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிய சன்ரைசர்ஸூக்கு வெற்றி கிட்டியது. அவரை 6.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸூக்கு கடுமையாக போட்டி போட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை மோதிய நிலையில் இறுதி கட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் கோதாவில் குதித்தன. முட்டி மோதியபடி சென்ற ஏலத்தின் முடிவில் 20.50 கோடி கொடுத்து பாட் கம்மின்ஸை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்தவொரு பிளேயரும் ஏலம் எடுக்கப்பட்டதில்லை. சாம் கரன், கேம்ரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதிகபட்சமாக 18.5 கோடிக்கு சாம் கரனை ஏலம் எடுத்தது பஞ்சாப். பாட் கம்மின்ஸூக்கு 20.50 கோடி கொடுத்ததன் மூலம் இந்த முறை அந்த வரலாற்றை முறியடித்திருக்கிறது சன்ரைசர்ஸ். மேலும், இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக மாறியுள்ளார்.

விலை போகாத ஸ்டீவ் ஸ்மித்

அதேநேரத்தில் வியப்பளிக்கும் வகையில் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த ஐபிஎல் அணியும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவல்லை. அவருடன் ரைலி ரூசோவ்-வையும் எந்த அணியும் வாங்கவில்லை. 

மேலும் படிக்க - IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News