IPL 2024: ஓய்வு பெறுவதை சூசகமாக அறிவித்த தோனி! வைரலாகும் புகைப்படம்!
MS Dhoni: எம்.எஸ் தோனி தனது சிறுவயது நண்பரின் கடையின் பெயரை தனது பேட்டில் ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாட தயாராகி வருகிறது. 42 வயதான தோனி தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி தோற்கடித்தது. 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா அணிக்கு வெற்றியை தேடி தந்தார். மேலும் கடந்த ஆண்டு முழுவதும் தோனிக்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்த சீசனில் விளையாடுவேன் என்று தோனி முன்பே கூறி இருந்தார். முழங்கால் அறுவை சிகிச்சை செய்திருந்த தோனி தற்போது மீண்டும் கிரிக்கெட் ஆட தொடங்கி உள்ளார்.
மேலும் படிக்க | Ishan Kishan: வெளியே அனுப்பிய ரோகித்... பாண்டியாவுடன் கூட்டணி போட்ட இஷான்!
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி இந்த சீசனுடன் ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற உள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 3 சீசன்களாக தோனி ஓய்வு பெறுகிறார் என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு ஐபிஎல் போட்டி முடிவிலும் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தோனி கூறி வருகிறார். ஆனால் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற போகிறார் என்பதை அவரே சில செயல்கள் மூலம் உறுதிப்படுத்தி வருகிறார். 2004ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான தோனி நீண்ட முடியுடன் காணப்பட்டார். இதுவே அவருக்கு அடையாளமாகவும் இருந்தது. பின்பு, அதனை வெட்டி கடந்த ஆண்டு வரை நார்மல் ஹேர் ஸ்டைலில் காணப்பட்டார். ஆனால், தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி மீண்டும் நீண்ட முடியில் காணப்படுகிறார்.
அதுமட்டுமின்றி, 2024 ஐபிஎல் சீசனில் தோனி தனது பேட்டில் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். பிரைம் ஸ்போர்ட்ஸ் என்பது ராஞ்சியில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் கடையாகும், இது தோனியின் சிறு வயது நண்பர் பரம்ஜித் சிங்கிற்குச் சொந்தமானது. தோனியின் ஆரம்ப நாட்களில், அவருக்கு ஸ்பான்சரை பெற உதவுவதில் பரம்ஜித் முக்கிய பங்கு வகித்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில், தோனியின் கிரிக்கெட் பயணத்தில் பரம்ஜித்தின் பங்கு பற்றி கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தோனி தனது கடைசி ஐபிஎல்லில் அவரது கடையின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார்.
2020 ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மான்செஸ்டரில் நடந்த 2019 ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதியின் போது நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடி இருந்தார் தோனி. அதன் பின்பு, 2021 மற்றும் 2023ல் சென்னை அணிக்காக ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 2023 சீசன் முழுவதும் தோனி ஒன்று அல்லது இரண்டு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்தார். ஆனால் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனது முழு திறமையை காண்பித்தார். சிஎஸ்கே அணி வீரர் தீபக் சாஹர், தோனி இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என்றும், அவரை மிகவும் உடற்தகுதியுடன் வைத்திருப்பதாக கூறி உள்ளார். மேலும், அவர் கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் இன்னும் 2-3 சீசன்களுக்கு விளையாட முடியும் என்று சாஹர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ