ஐபிஎல் 2024 அட்டவணை இப்போது வரை சஸ்பென்ஸாக இருக்கிறது. பிசிசிஐ ஏற்கனவே ஐபிஎல் தேதிகளை முடிவு செய்து வைத்திருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இப்போதைய தகவல்களின்படி, 10 அணிகள் மோதும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்த பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. தேதி ரெடியாக இருந்தாலும் மைதானம் மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் மைதானம் இறுதி செய்யப்பட்டு உடனடியாக ஐபிஎல் 2024 தொடருக்கான முழு அட்டவணையும் வெளியாகும். மார்ச் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் தேர்தல் தேதிகள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த 4 வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!


இது குறித்து பிசிசிஐ வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், " ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து ஏற்கனவே நாங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் தேர்தல் தேதி குறித்த விவரம் தேவைப்படுவதாக கூறியிருக்கிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளும் இருப்பதால் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாது என்பதை நாங்கள் அறிவோம். உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முழுமையான அறிவிப்பு கிடைத்தவுடன் உடனடியாக ஐபிஎல் 2024 தொடருக்கான தேதி, மைதானம் உள்ளிட்ட முழு விவரங்களையும் பிசிசிஐ வெளியிடும்" என தெரிவித்துள்ளது. 


இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியானது இரண்டு கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால் தேதி மற்றும் மைதானங்கள் இறுதி செய்ய வேண்டியிருப்பதாலும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதாலும் முதல் பாதி அட்டவணை மட்டும் வெளியிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு எப்படி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளும் நடத்த முடிவு செய்திருக்கும் பிசிசிஐ, முழு தொடரையும் இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது. 


முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இந்திய அணியின் இளம் நட்சத்திரம் சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைடன்ஸ் அணியும் களம் காண இருக்கின்றன. அதிகபட்சமாக மார்ச் இறுதி வாரத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறது. அதேபோல் ஜூன் மாதம் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகளை முன்கூட்டியே முடிக்கவும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத அணிகளில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான பயிற்சியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் மேற்கொள்ள முன்கூட்டியே அனுப்பி வைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.


மேலும் படிக்க | IPL 2024: சர்ஃபராஸ் கானின் சேவை... எந்த ஐபிஎல் அணிக்கு தேவை...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ