IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் மார்ச் 22ம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசன் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் மொத்தம் 10 ஐபிஎல் அணிகள் விளையாட உள்ளன.  இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரு போட்டியில் இரண்டு பவுன்சர்களை வீசுவதற்கு பந்துவீச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட இம்பாக்ட் பிளேயர் விதிகள் இந்த ஆண்டும் தொடர உள்ளது.  இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில, 2 வாரங்களுக்கு மட்டுமே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Video: குல்தீப் யாதவின் அதிசய பந்து... வாயை பிளந்த இங்கிலாந்து - என்ன ஆச்சு பாருங்க!             


அதே போல இந்த ஆண்டு மினி ஏலம் நடைபெற்றுள்ள நிலையில் பல புதிய வீரர்கள் முதன் முறையாக விளையாட உள்ளனர்.  மேலும் ஐந்து அணிகளுக்கு புதிய கேப்டன்கள் பதிவியேற்றுள்ளனர்.  மும்பை அணிக்காக 5 கோப்பைகளை பெற்று தந்த ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் 2024 ஏலத்தில் இரண்டாவது அதிக விலைக்கு போன பேட் கம்மின்ஸ் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள 5 கேப்டன்களை பற்றி பார்ப்போம். 


மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கேப்டன் பதவியேற்க உள்ளார். கடந்த காலங்களில் மும்பை அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக 2 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டார்.  ஒரு முறை கோப்பையையும், ஒரு முறை பைனல் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.  இந்நிலையில், இந்த ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.  ரோஹித்துக்குப் பதிலாக மும்பையின் கேப்டனாக செயல்பட உள்ளார். 
 
டெல்லி கேபிட்டல்ஸ்


ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்க உள்ளார். கார் விபத்திற்கு பிறகு கடந்த ஆண்டு முழுவதும் பந்த் கிரிக்கெட் விளையாடவில்லை.  இதனால் ஐபிஎல் 2023 போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார்.  இந்த ஆண்டு ரிஷப் பந்த் அணிக்கு திரும்பி உள்ளதால் வார்னர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட உள்ளார். 


குஜராத் டைட்டன்ஸ்


ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றுள்ளதால் ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மான் கில் களமிறங்க உள்ளார்.  குஜராத் அணியின் துணை கேப்டனாக ரஷித் கான் செயல்பட உள்ளார்.  இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள கில் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்புள்ளது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


ஐபிஎல் 2024 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமித்துள்ளது அணி நிர்வாகம்.  தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ராமுக்கு பதிலாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டனாக பதவி ஏற்கவுள்ளார் கம்மின்ஸ்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.  ஐபிஎல் 2022ல் கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டிகளில் விளையாடவில்லை.  அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா கேப்டனாக செயல்பட்டார்.


மேலும் படிக்க | தோனி போல ஸ்கெட்ச் போட்ட துருவ் ஜூரல் - அடுத்த பந்தே வீழ்ந்த ஓலி போப்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ