விராட் கோலி அடித்த மிக மோசமான சதம்! ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமா?
IPL 2024 Virat Kohli`s worst century : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணியும் தோல்வியை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்திருந்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்தது. இதுவரை அவர் அடித்த சதங்களிலேயே மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட, கூடுதல் பந்துகளில் அடிக்கப்பட்ட சதமாக அது அமைந்தது என்பதால், இந்த சதத்தை விராட் கோலி மீண்டும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 சதங்கள் அடித்திருக்கும் விராட், 67 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை பூர்த்தி செய்தார்.
விராட் கோலியே விரும்பமாட்டார்
இது ஆர்சிபி அணியை வெற்றி வைக்கக்கூடிய ரன்களாக அமையவில்லை. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அதாவது முழுமையாக 12 ஓவர்களை விராட் கோலி மட்டுமே ஆடியிருக்கிறார். எஞ்சிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்த்து 8 ஓவர்கள் ஆடியிருக்கின்றனர். இந்தவகையில் பார்க்கும்போது ஆர்சிபி அணிக்கு மிகவும் மந்தமான பேட்டிங்கையே விராட் கோலி வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவாகவே அவருடைய ஸ்கோர் இருந்திருக்கிறது. இது ஆர்சிபி அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை விட குறைவானது என்பதால் விராட் கோலியின் பேட்டிங் ஒருவிதத்தில் அந்த அணிக்கு எதிர்மறையாகவும் அமைந்திருக்கிறது.
பவர்பிளேவில் மிகவும் மந்தமான பேட்டிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பவர்பிளேவில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் விராட் கோலி 6 ஓவர்கள் முடிந்திருந்தபோது 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, அடுத்த 9 ஓவர்களில் விராட் கோலி 28 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் எடுத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இன்னிங்ஸின் கடைசி 5 ஓவர்களில் விராட் கோலி 19 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்கள் எடுத்தார். விராட் கோலியின் இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் விரைவாக ரன்களை எடுக்கமால் மந்தமான பேட்டிங்கை ஆடியிருப்பது தெரிகிறது.
விராட் கோலி அடித்த மெதுவான சதம்
முதல் இன்னிங்ஸ் முடிவில் விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்களில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி இன்னும் கொஞ்சம் வேகம் காட்டியிருந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க முடியும். ஆனால், ஜோஸ் பட்லரின் இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் 58 பந்துகளில் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு (ஆர்ஆர்) ஐந்து பந்துகள் மீதமிருக்க வெற்றியைக் தேடிக் கொடுத்தார். விராட் கோலி வேகமான இன்னிங்ஸ் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும், அதனால் போட்டியின் முடிவு வேறுவிதமாககூட மாறியிருக்கும்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் சதம்
1. 63 பந்துகளில் 100 நாட் அவுட் vs குஜராத் லயன்ஸ்
2. 58 பந்துகளில் 108 நாட்அவுட் vs ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்
3. 55 பந்துகளில் 109 ரன்கள் vs குஜராத் லயன்ஸ்
4. 50 பந்துகளில் 113 ரன்கள் vs பஞ்சாப் கிங்ஸ்
5. 58 பந்துகளில் 100 ரன்கள் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
6. 63 பந்துகளில் 100 ரன்கள் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
7. 61 பந்துகளில் 101 நாட் அவுட் vs குஜராத் டைட்டன்ஸ்
8. 72 பந்துகளில் 113 ரன்கள் நாட்அவுட் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மேலும் படிக்க | சதம் அடித்தும் வேஸ்ட்...? மெதுவாக விளையாடினாரா விராட் கோலி - அவரே சொன்ன காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ