IPL 2025 Mega Auction, Retention, Purse Amount, RTM Full Details: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த 2025 சீசனுக்கு வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தை முன்னிட்டு 10 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று (அக். 31) வெளியிட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏலத்திற்கு முன்னரோ அல்லது ஏலத்தில் RTM பயன்படுத்தியோ 6 வீரர்களை தக்கவைக்கலாம். இந்த 6 பேரில் Capped வீரர்கள் அதிகபட்சம் 5 பேரும், குறைந்தபட்சம் 4 பேரும் இருக்கலாம். Uncapped வீரரில் ஒருவரை கண்டிப்பாக தக்கவைக்க வேண்டும். அதிகபட்சமாக இரண்டு Uncapped வீரர்களை தக்கவைக்கலாம். ஏலத்திற்கு முன்னர் 6 பேரை தக்கவைத்தால் ஒரு அணி ரூ.79 கோடியை செலவிட வேண்டும்.


ஏலத்திற்கு முன் ஒரு அணி தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு மெகா ஏலத்தில் RTM கார்டு ஆப்ஷன் கிடைக்கும். ஒரு அணி 2 Capped வீரர்களை மட்டும் தக்கவைத்திருக்கிறது என்றால் அந்த அணிக்கு ஏலத்தில் 4 RTM கார்டு ஆப்ஷன் கிடைக்கும். அதில் 3 Capped வீரர்களையும், 1 Uncapped வீரரையும் அந்த அணி தக்கவைக்கலாம். 


அந்த வகையில், 10 அணிகளும் ஏலத்திற்கு முன் யார் யாரை தக்கவைத்தன, ஏலத்திற்கு யார் யாரை விடுவித்துள்ளன, ஒவ்வொரு அணிக்கும் எத்தனை RTM இருக்கிறது, ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொகையுடன் ஏலத்திற்கு வருகிறது என்பதை இதில் முழுமையாக காணலாம். 


10. பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷஷாங்க் சிங் (Uncapped) - ரூ.5.50 கோடி, பிரப்சிம்ரன் சிங் (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அதர்வா டைடே, நாதன் எல்லிஸ், சாம் கரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங், ஹர்ஷல் படேல் , அசுதோஷ் ஷர்மா, விஸ்வநாத் பிரதாப் சிங், அர்ஷ்தீப் சிங், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவாண், லியாம் லிவிங்ஸ்டோன், தனய் தியாகராஜன், பிரின்ஸ் சௌத்ரி, ரிலீ ரோசோவ், ஷிகர் தவாண்.


மீதமுள்ள RTM - 4


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.110.5 கோடி (அதிக தொகை வைத்துள்ள அணி)


மேலும் படிக்க | ஐபிஎல் 2025 | ஆர்சிபி கொடுத்த மாஸ் அப்டேட், கிங் கோலி மீண்டும் கேப்டன்


9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட்  கோலி - ரூ.21 கோடி, ரஜத் பட்டிதர் - ரூ.11 கோடி, யஷ் தயாள் (Uncapped) - ரூ.5 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், கேம்ரூன் கிரீன், அல்ஸாரி ஜோசப், டாம் கரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்சு ஷர்மா, ராஜன் குமார், 


மீதமுள்ள RTM - 3


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.83 கோடி



8. டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்சர் பட்டேல் - ரூ.16.50 கோடி, குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி, ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி, அபிஷேக் போரேல் (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், முகேஷ் குமார், ரிக்கி , குமார் குஷாக்ரா, குல்பாடின் நைப், இஷாந்த் சர்மா, யாஷ் துல், ரசிக் தார், ஜே ரிச்சர்ட்சன், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், சுமித் குமார், ஷாய் ஹோப், ஸ்வஸ்திக் சிகாரா, லிசாட் வில்லியம்ஸ், ஹாரி புரூக், லுங்கி இங்கிடி, மிட்செல் மார்ஷ்.


மீதமுள்ள RTM - 2


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.73 கோடி


7. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி, ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி, மயங்க் யாதவ் - ரூ.11 கோடி, ஆயுஷ் பதோனி (Uncapped) - ரூ.4 கோடி, மோஷின் கான் (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கே.எல்.ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேரக் மங்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, கைல் மேயர்ஸ், ஷமர் ஜோசப், கிருஷ்ணப்பா கௌதம், அர்ஷின் குல்கர்னி, எம். சித்தார்த், ஆஷ்டன் டர்னர், மாட் ஹென்றி, முகமது அர்ஷத் கான், மார்க் வூட், டேவிட் வில்லி, சிவம் மாவி.


மீதமுள்ள RTM - 1


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.69 கோடி


6. குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான் - ரூ.18 கோடி, சுப்மான் கில் - ரூ.16.50 கோடி, சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி, ராகுல் திவாட்டியா (Uncapped) - ரூ.4 கோடி, ஷாருக்கான் (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், நூர் அகமது, சாய் கிஷோர், ஜோஸ்வா லிட்டில், மோகித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், கர்னூர் ப்ரியார்கி, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர், பிஆர் ஷரத், முகமது ஷமி, ராபின் மின்ஸ், சுஷாந்த் மிஸ்ரா.


மீதமுள்ள RTM - 1


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.69 கோடி


மேலும் படிக்க | 55 லட்சம் டூ 13 கோடி.. கேகேஆர் அணியில் ரிங்கு சிங் - அள்ளிக்கொடுத்த ஷாருக்கான்



5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரின்கு சிங் - ரூ.13 கோடி, வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி, சுனில் நரைன் - ரூ.12 கோடி, ஆண்ட்ரே ரஸ்ஸல் - ரூ.12 கோடி, ஹர்ஷித் ராணா (Uncapped) - ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், பில் சால்ட், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், வைபவ் அரோரா, கே.எஸ்.பரத், சேத்தன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷெர்பேன் ருதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, சாஹின்சா பாண்டே, ஜேசன் ராய், கஸ் அட்கின்சன், முஜீப் உர் ரஹ்மான்


மீதமுள்ள RTM - 0


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.51 கோடி


4. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி, ரியான் பராக் - ரூ.14 கோடி, துருவ் ஜூரேல் - ரூ.14 கோடி, ஷிம்ரோன் ஹெட்மயர் - ரூ.11 கோடி, சந்தீப் சர்மா (Uncapped) - ரூ.4 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜாஸ் பட்லர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆவேஷ் கான், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியான், கேசவ் மகராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆடம் ஸாம்பா, குல்தீப் சென், நவ்தீப் சைனி, ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித்ரே முஷ்டாக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர்


மீதமுள்ள RTM - 0


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.41 கோடி (குறைந்த தொகை வைத்திருக்கும் அணி)


மேலும் படிக்க | டி20 அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் காயம்! 3 மாதம் விளையாட முடியாது!


3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி, அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி, டிராவிஸ் - ரூ.11 கோடி, நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அப்துல் சமத், எய்டன் மார்க்ராம், மார்கோ யான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், க்ளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி. நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ரான் மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஷாபாசூகி, விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜெய்தேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன், வனிந்து ஹசரங்கா.


மீதமுள்ள RTM - 1 (Uncapped வீரரை மட்டுமே தக்கவைக்க முடியும்)


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.41 கோடி (குறைந்த தொகை வைத்திருக்கும் அணி)


2. மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி, ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி, சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி, ரோஹித் சர்மா - ரூ.16.30 கோடி, திலக் வர்மா - ரூ.11 கோடி


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷான், டிம் டேவிட், ஹார்விக் தேசாய், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், லூக் வூட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், முகமது நபி, ஷிவாலிக் ஷர்மா, குவேனா மபாகா


மீதமுள்ள RTM - 1 (Uncapped வீரரை மட்டுமே தக்கவைக்க முடியும்)


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.45 கோடி


 



1. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings)


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி, ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி, ஷிவம் தூபே, ரூ.12 கோடி, மதீஷா பதிரானா - ரூ.13 கோடி, எம்.எஸ்.தோனி (Uncapped) - ரூ.4 கோடி 


விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ஷர்துல் ரவீந்திர, ஷர்துல் ரவீந்திரன் , முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன், அவனிஷ் ராவ் ஆரவெல்லி, டெவோன் கான்வே


மீதமுள்ள RTM - 1 


மீதமுள்ள ஏலத்தொகை - ரூ.55 கோடி


மேலும் படிக்க | CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா... இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் - ஏலத்தில் தூக்க பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ