IPL Hot News : டிசி அணியில் விலகும் ரிஷப், அதிக தொகை வேண்டும் என பிடிவாதம்
Rishabh Pant, Delhi Capitals : ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலக உள்ளார். ரிட்டெயின் தொகையில் அவருக்கு விருப்பமில்லை.
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் ரீட்டெயின் செய்யப்போகும் பிளேயர்கள் லிஸ்டை தயார் செய்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்திய அணிகள் ரீட்டெயின் செய்த பிளேயர்கள் லிஸ்டை கமுக்கமாக வைத்திருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து பெரிய செய்தி லீக்காகியுள்ளது. அதாவது, அந்த அணியின் ரீட்டெயின் லிஸ்டில் ரிஷப் பந்த் இல்லையாம். அவர் 18 கோடி வேல்யூவை எதிர்பார்க்கும் நிலையில், அந்த தொகையை டெல்லி அணி ரிஷப் பந்துக்கு கொடுக்க தயாராக இல்லை. இதனால் அந்த அணியின் ரீட்டெயின் லிஸ்டில் இப்போது ரிஷப் பந்த் பெயர் இடம்பெறவில்லை. அதனால், தன்னுடைய பெயர் ஏலத்துக்கு வருவதை அவரே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சூசகமாக எழுதியுள்ளார்.
’’நான் ஐபிஎல் ஏலத்துக்கு வந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?" என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு பலரும் பல கருத்துகளை கூறி ரிஷப் பந்தை உசுப்பேற்றி வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏன் ரிஷப் பந்தை தக்க வைக்க விரும்பவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடங்கியது முதல் இருக்கும் அணி என்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகளைப் போலவே இன்னும் ஒருமுறைகூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அதனால் அந்த அணி இந்த ஆண்டு புதிய அணியை மீண்டும் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கை விடுவித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ், அணியில் செய்யப்போகும் சீர்த்திருத்தம் குறித்து ரிஷப் பந்திடமும் பேசியுள்ளது.
அதன்படி, யார் யாரை அணி எவ்வளவு தொகையில் ரீட்டெயின் செய்யலாம் என நினைக்கிறது என்ற லிஸ்டை ரிஷப் பந்திடம் கொடுத்திருக்கிறது. அதில் 18 கோடி ரூபாய் லிஸ்டில் அவர் பெயர் இல்லாததை பார்த்து அதிருப்தி அடைந்திருக்கிறார். இந்த பிரைஸ் வேல்யூவில் என்னை ரீட்டெயின் செய்யவில்லை என்றால் என்னை விடுவித்துவிடுங்கள், நான் ஏலத்துக்கே செல்கிறேன் என்றும் டெல்லி அணி நிர்வாகத்திடம் நேரடியாகவும் கூறிவிட்டார். அதனால் டெல்லி அணி என்ன செய்யலாம் என இப்போது ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் ஏலம் நெருங்குவதற்கு முன்பாக கூட ரிஷப் பந்தின் ரீட்டெயின் வேல்யூவை அதிகரிக்கலாம் என்ற திட்டமும் டிசி அணியிடம் இருக்கிறது. இருப்பினும் இப்போதைக்கு எடுத்திருக்கும் முடிவின்படி அவரை விடுவிக்கலாம் என்ற முடிவிலும் உள்ளது.
18 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் ரிஷப் பந்த் பெயர் நிச்சயம் ஐபிஎல் 2025 ஏலத்தில் இருக்கும். அதேபோல் டெல்லி அணி அவரை விட நல்ல பிளேயர் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தயார் செய்து வைத்திருக்கிறது. அவர் இல்லையென்றால் இன்னொரு பிளேயரை தூக்கவும் அந்த அணி தயாராகிக் கொண்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ