IPL 2025: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. அதில் ஐபிஎல் தலைவர் அருண் துமால் கலந்து கொண்டார். அப்போது தான் இந்த தகவலை அவர் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தொடர் முடிந்த கையோடு மார்ச் 14ஆம் தேதியே ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது என தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த தகவல் தவறு என தற்போது தெரிய வந்துள்ளது. 


மார்ச் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு


ஐபிஎல் தலைவர் அருண் துமால் 2025 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி தொடங்கும் என உறுதியாக கூறி உள்ளார். மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது எனவும் அவர் கூறி உள்ளார். 


கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இதேபோல் தான் தொடங்கியது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதேபோல் இந்த முறையும் மார்ச் 21ஆம் தேதி தொடங்கி மே 25 வரை நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசன் போலவே இந்த ஆண்டு அதே அளவு எண்ணிக்கையிலான போட்டிகள் தான் உள்ளன. அதனால் இந்த தேதிகளில் 2025 ஐபிஎல் தொடர் நடைபெறலாம்.


குறுகிய காலமே உள்ளது


பாகிஸ்தானில் மார்ச் 09ஆம் தேதியுடன் சாம்பியன்ஸ் டிராபி முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கும் நிலையில், வீரர்களுக்கு குறைந்த நாட்களே உள்ளன. சாம்பியன்ஸ் டிராபிக்கும் ஐபிஎல் தொடங்குவதற்கும் 12 நாட்களே இடைவெளி இருப்பதால் வீரர்கள் ஓய்வெடுத்து வலைப் பயிற்சிக்கு உடனடியாக செல்ல வேண்டும். 


2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 182 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 ரூபாய் கோடிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 ரூபாய் கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 23.75 ரூபாய் கோடிக்கும் வாங்கப்பட்டனர். சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் தொடர் அடுத்தடுத்து வருவதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கும்.  


மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட இந்த வீரர்... கிளாசெனை அவுட்டாக்கிய அந்த 'ஸ்பெஷல் பந்து'


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ