ரூ. 8.4 கோடிக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் அணி - யார் இந்த வருண் சக்ரவர்த்தி?
ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தி இவ்வளவு விலைக்கு ஏலம் போக காரணம் என்ன? யார் இந்த வருண் சக்கரவர்த்தி?
அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 3.30 மணிக்கு முதல் நடைப்பெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர், இப்பட்டியலில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்க்கான ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8.4 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. சென்னை அணியும் இவரை வாங்க முயற்ச்சித்தது, ரூ. 3.40 கோடி வரை ஏலம் கேட்டது. ஆனால் கடைசியாக அதற்க்கு மேல் கேட்க பணம் இல்லாததால் பின் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தி இவ்வளவு விலைக்கு ஏலம் போக காரணம் என்ன? யார் இந்த வருண் சக்கரவர்த்தி? இவரைப்பற்றி ஒரு அலசல்.
> கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் வருண் சக்கரவர்த்தி வினோத். தமிழ்நாட்டின் சிறந்த ஸ்பின்னர் ஆவார்.
> இவர் முதலில் ஒரு விக்கெட் - கீப்பராக தான் தனது கிரிக்கெட்டை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் வேகப்பந்துவீச்சாளராக மாறினார்.
> பின்னர் இவர் கிரிக்கெட் ஆடுவதை விட்டு, கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை படிப்பை தொடர்ந்தார். இரண்டு ஆண்டு படிப்பை முடித்த பின்பு, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
> பின்னர் மீண்டும் தனது வாழ்க்கையை கிரிக்கெட் பக்கம் திருப்பிய இவரருக்கு ஏற்ப்பட்ட காயத்தால் வேகப் பந்துவீச்சாளராக இருந்தவர், சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.
> கிளப் அணிக்காக ஆடிவந்த இவருக்கு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மூலம் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளின் வீரர்களுக்கு பயிற்சியில் பந்து வீசும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பு இவருக்கு நல்ல அனுபத்தை தந்துள்ளது. அந்த அனுபவம் அவருக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் விளையாடிய போது நல்ல பலனை தந்தது.
> நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணியில் விளையாடினார். இவரின் சுழல் பந்தை சமாளிக்க முடியாமல் பலர் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
> கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிக்கு பின்னர், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் நன்றாக விளையாடி, ஒரு நாள் இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கக்கூடிய உயரத்துக்கு செல்ல வேண்டும் என்று Zee News Tamil சேனல் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம்.