IPL Auction 2021: விறுவிறுப்பாய் செல்லும் IPL ஏலம், CSK-வுடன் இணைந்தார் மொயின் அலி
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 ஏலம் சென்னையில் துவங்கிவிட்டது. பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏலம் ரசிகர்களிடையே பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
6:51 PM 2/18/2021
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை ஏலத்தில் அதிகமாக பணத்தை செலவிடவில்லை. ஆல்ரவுண்டர் ஜெகதீஷா சுசித்தை மட்டும் அந்த அணி ரூ .30 லட்சத்திற்கு வாங்கியது.
6:20 PM 2/18/2021
மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் பஞ்சாப் கிங்ஸுக்கு விற்கப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ .1 கோடிக்கு அவர் விற்கப்பட்டார்.
6:17 PM 2/18/2021
மார்னஸ் லாபுசாக்னே UNSOLD
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபூசாக்னே தனது அடிப்படை விலையான ரூ .1 கோடியில் விற்கப்படவில்லை
6:15 PM 2/18/2021
டாம் கரன் DC
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் டெல்லி கேபிடல்சுக்கு ரூ .5.25 கோடிக்கு விற்கப்பட்டார்
6:05 PM 2/18/2021
சேதேஸ்வர் புஜாரா CSK
டெஸ்ட் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற சேதேஸ்வர் புஜாராவை எம்.எஸ்.தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரது அடிப்படை விலையான ரூ .50 லட்சத்தில் வாங்கியது.
5:37 PM 2/18/2021
ரெய்லி மெரிடித் PBKS
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரெய்லி மெரிடித்தை பஞ்சாப் அணி 8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சேதன் சகாரியா RR
சௌராஷ்டிராவின் சேதன் சகாரியாவை 1.2 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
5:19 PM 2/18/2021
கே.கௌதம் CSK
இந்திய கிரிக்கெட்டர் கெ.கௌதமின் ஏலம் விறுவிறுப்பாக நடந்த நிலையில், விலை 7 கோடியை தாண்டியபோது CSK உள்ளே நுழைந்தது. இறுதியாக 9.25 கோடிக்கு CSK அணி கௌதமை வாங்கியது.
5:13 PM 2/18/2021
ஷாருக் கானை வாங்கியது PBKS
பஞ்சாப் அணி ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவர் டொமெஸ்டிக் போட்டிகளில் மிக நன்றாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிபல் படேல் DC
இந்திய கிரிக்கெட்டர் ரிபல் படேலை டெல்லி கேப்பிடல்ஸ் 20 லட்சத்திற்கு வாங்கியது.
5:05 PM 2/18/2021
சச்சின் பேபி, ரஜத் பதிதார் RCB
கேரள வீரர் சச்சின் பேபியை RCB 20 லட்சத்திற்கு வாங்கியது. அதே போல் மத்திய பிரதேச வீரர் ரஜத் பதிதாரையும் RCB அதே விலைக்கு வாங்கியது.
4:53 PM 2/18/2021
பியுஷ் சாவ்லா MI
இந்திய வீரர் பியுஷ் சாவ்லாவின் ஏலம் அடிப்படை விலையான 5 லட்சத்தில் தொடங்கியது. டெல்லி மும்பைக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அவரை 2.4 கோடி ரூபாய் விலையில் வாங்கியது
4:46 PM 2/18/2021
உமேஷ் யாதவ் DC
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு வாங்கியது
தன் கௌல்டர்னெயில் MI
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நேதன் கௌல்டர்னெயிலை மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது
4:41 PM 2/18/2021
ஜ்ஹே ரிச்சர்ட்சன் PBKS
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஜ்ஹே ரிச்சர்ட்சனை வாங்குவதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 14 கோடி ரூபாய் விலையில் பஞ்சாப் அணி அவரை வாங்கியது.
4:33 PM 2/18/2021
ஆடம் மில்ன் MI
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் மும்பை இந்தியன்ஸுக்கு ரூ .3.2 கோடிக்கு விற்கப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ .50 லட்சம் ஆகும்.
முஸ்தாபிசூர் ரஹ்மான் RR
பங்களாதேஷ் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்திராபிசூர் ரஹ்மான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ரூ .1 கோடிக்கு விற்கப்பட்டார்.
4:02 PM 2/18/2021
IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலையில் விற்கப்பட்டார் க்ரிஸ் மோரிஸ்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அவர் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய்.
3:58 PM 2/18/2021
கிரிஸ் மோரிசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி. அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய். 14.75 கோடியைத் தாண்டி ஏலம் செல்கிறது.
3:44 PM 2/18/2021
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மோயின் அலியை வாங்க CSK மற்றும் பஞ்சாப் அணிக்கு கடும் போட்டி நிலவு இறுதியில் 7 கோடிக்கு CSK அவரை வாங்கியது
3:28 PM 2/18/2021
ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் க்லென் மாக்ஸ்வெல்லை RCB வாங்கிவிட்டது. அவர் 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
3:28 PM 2/18/2021
ஸ்டீவ் ஸ்மித் ஏலம் எடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி.
ரூ .2 கோடி பட்டியலில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை ஆர்.சி.பி (RCB) அணி முதலில் ஏலம் கூறியது. ஆனால் இறுதியாக ரூ .2.2 கோடிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தை டெல்லி அணி எடுத்தது.
3:25 PM 2/18/2021
இந்த ஆண்டுக்கான ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வீரர் கருண் நாயர் .
IPL Auction 2021: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 ஏலம் சென்னையில் துவங்கிவிட்டது. பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏலம் ரசிகர்களிடையே பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த 292 கிரிக்கெட் வீரர்கள் இன்றைய IPL மினி ஏலத்தில் ஏலம் விடப்படுவார்கள். பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஏலத்தில் எட்டு அணிகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான வீரர்களுக்காக ஏலத்தில் பலத்த போட்டியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் ஏலத்தில் முதலாவதாக ஏலம் விடப்பட்ட வீரர் கருண் நாயர். 50 லட்சம் ரூபாய் அடிப்படை தொகை கொண்ட அவரை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
அடுத்ததாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேல்ஸ் ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை தொகை 1.5 கோடி ரூபாய். ஆனால் அவரையும் எந்த அணியும் முதல் சுற்றில் ஏலம் எடுக்கவில்லை. இது ஆச்சரியமான விஷயம். ஏனெனில், இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டிபோடக் கூடும் என பேசப்பட்டது.
2 கோடி அடிப்படை தொகை கொண்ட ஜேசன் ராயையும் வாங்க எந்த அணியும் இந்த சுற்றில் முன்வரவில்லை.
ALSO READ: IPL Auction 2021: எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது. எத்தனை வீரர்களை ஏலம் எடுக்க முடியும்
அடுத்ததாக ஏலம் விடப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் 2.2 கோடி ரூபாய்க்கு வாங்கினர்.
முன்னதாக, மினி ஏலத்திற்கு முன்னர் ஆஷிஷ் நெஹ்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கேதார் ஜாதவை வாங்க முயற்சிக்கக்கூடும் என கூறினார். அவரது அடிப்படை விலை ரூ .2 கோடி.
இன்று ஏலத்தில் விற்பனைக்கு வரும் 292 வீரர்களில், 164 இந்தியர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்ளனர்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகத்தொகை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் உள்ளது. அந்த அணியிடம் ரூ .53.20 கோடி கையிருப்பு உள்ளது. அவர்கள் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
இந்திய வீரர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 1114 வீரர்கள் ஏலத்திற்கு தங்களை பதிவு செய்துள்ளனர். அதை 292 ஆக குறைத்து, அந்த பட்டியல் எட்டு அணியின் உரிமையாளர்களுக்கு பி.சி.சி.ஐ வழங்கியது.
வீரர்களின் மிக உயர்ந்த அடிப்படை விலை ரூ .2 கோடியாகவும், மிகக் குறைந்த அடிப்படை விலை ரூ .20 லட்சமாகவும் உள்ளது. ரூ .2 கோடி அடிப்படை விலை பிரிவில் மொத்தம் 10 வீரர்கள் உள்ளனர்.
ALSO READ: இன்று IPL 2021 ஏலம்: மொத்தம் 292 வீரர்கள் 164 இந்தியர்கள், 125 வெளிநாட்டினர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR