IPL Auction 2021: பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஆண்டுக்கான IPL ஏலத்தில் எட்டு அணிகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுக்க போட்டியில் ஈடுபட உள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த 292 கிரிக்கெட் வீரர்கள் இன்றைய IPL மினி ஏலத்தில் (IPL Mini Auction) பங்கேற்கின்றனர். அதில் 164 பேர் இந்தியர்கள், 125 பேர் வெளிநாட்டினர் மற்றும் மூன்று இணை வீரர்களும் ஏலத்தில் இருப்பார்கள். ஆனால் எட்டு அணியின் உரிமையாளர்களால் அதிகபட்சம் 61 வீரர்களை ஏலம் எடுக்க முடியும். வாருங்கள் பார்ப்போம். எந்த அணிக்கு எவ்வளவு வீரர்கள் தேவை. அவர்களிடம் உள்ள ஏலத்தொகையைக் குறித்து பார்ப்போம்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகத்தொகை பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியிடம் உள்ளது. அந்த அணியிடம் ரூ .53.20 கோடி கையிருப்பு உள்ளது. அவர்கள் 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
இந்திய வீரர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 1114 வீரர்கள் ஏலத்திற்கு தங்களை பதிவு செய்துள்ளனர். அதை 292 ஆக குறைத்து, அந்த பட்டியல் எட்டு அணியின் உரிமையாளர்களுக்கு பி.சி.சி.ஐ வழங்கியது.
க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), ஆரோன் பிஞ்ச் (Aaron Finch), ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith), ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் அதிக விலைக்கு வாங்கப்படலாம் எனத் தெரிகிறது. இவர்கள் 2 கோடி ரூபாய் ஏலத்தொகை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2 கோடி ஏலப் பட்டியலில் மொத்தம் 10 வீரர்கள் உள்ளனர். 1.5 கோடி ஏலப் பட்டியலில் 12 வீரர்களும், 1 கோடி ஏலப் பட்டியலில் 11 வீரர்களும், 75 லட்சம் ஏலப் பட்டியலில் மொத்தம் 15 வீரர்களும், 50 லட்சம் ரூபாய் ஏலப் பட்டியலில் 65 வீரர்களும் இடம் பெற்றுள்ளார்.
இந்த ஏலத்தில் குறைந்த வீரர்களை எடுக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) உள்ளது. அவர்கள் மூன்று காலியிடங்களை மட்டும் நிரப்ப வேண்டியுள்ளது. அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RRoyal Challengers Bangalore) அணியில் அதிக இடங்கள் உள்ளன. அதாவது 13 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளனர்.
ALSO READ | இன்று IPL 2021 ஏலம்: மொத்தம் 292 வீரர்கள் 164 இந்தியர்கள், 125 வெளிநாட்டினர்
ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் மொத்த பணம் மற்றும் இடம் வீரர்களின் பட்டியலைக் குறித்து பார்ப்போம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR