IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர்
ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலம் பெங்களுருவில் நடைபெற்றது. இதில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட 5 வீரர்களைப் பார்க்கலாம்
இஷான் கிஷன்
விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. அவரை 15.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இஷான் கிஷனை ஏலம் எடுக்க சென்னை அணியும் முயன்றது. ஆனால், மும்பை அணி அவரை வேறு அணிக்கு விட விரும்பவில்லை.
ஸ்ரேயாஸ் அய்யர்
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஷ் அய்யர், கடந்த ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெல்லி அணி ஸ்ரேயாஸ் அய்யரை ரீட்டெய்ன் செய்யாததால் ஏலத்தில் கலந்து கொண்டார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே!
ஹசரங்கா
இலங்கை சுழற்பந்துவீச்சாளரான ஹசரங்காவை அணியில் எடுக்க பஞ்சாப், பெங்களுரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. குஜராத் அணியும் முயன்ற நிலையில் கடைசியாக 10.75 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. அவர் ஏற்கனவே பெங்களுரு அணியில் விளையாடியிருந்தார். ரீட்டெயின் செய்ய முடியாத காரணத்தால், ஏலம் மூலம் ஹசரங்காவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது ஆர்சிபி.
ஹர்ஷல் படேல்
இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஹர்சல் படேலும், ஏற்கனவே ஆர்சிபி அணியில் விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அவரை மீண்டும் ஏலம் எடுத்தது ஆர்சிபி. 10.75 கோடிக்கு ஹர்ஷல் படேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: ஏலத்தில் விலைபோகாத சுரேஷ் ரெய்னா!
நிக்கோலஸ் பூரன்
விக்கெட் கீப்பர், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரனுக்கும் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. சென்னை, சன்ரைசர்ஸ் அணிகள் அடுத்தடுத்து விலையை உயர்த்திக் கொண்டே சென்றன. முடிவில் 10.75 கோடிக்கு ஹைதராபாத் அணிக்கு சென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR