ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் மெகா ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2022, 12:57 PM IST
  • மதியம் 12மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்கியது.
  • முதல் வீரராக தவான் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
  • ஷ்ரேயஸ் அய்யர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலம் போனார்.
ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே! title=

இந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர்.  எந்த அணிக்கு எந்த வீரர்கள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.  இந்நிலையில் இன்று மற்றும் நாளை பெங்களூரில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.  இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளன.  

ipl

மேலும் படிக்க | Live: ஐபிஎல் மெகா ஏலம்

மதியம் 12மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்கியது.  முதல் வீரராக தவான் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.  கடந்த முறை டெல்லி அணிக்காக தவான் விளையாடினார்.  ஏலத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.  யாரும் எதிர்பார்க்காத விதமாக இடையில் பஞ்சாப் அணி உள்ளே வந்து 8.25 கோடிக்கு தவனை வாங்கியது.  சென்னை அணி அஸ்வினை அணியில் மீண்டும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருமுறை கூட ஏலத்தில் கேட்கவில்லை.  ராஜஸ்தான் அணி அஸ்வினை 5 கோடிக்கு எடுத்துள்ளது.  

பாட் கம்மின்ஸை 7.25 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.  ரபாடா 9.25க்கு பஞ்சாப் அணிக்கும், ஷ்ரேயஸ் அய்யர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலம் போனார்கள்.  சி.எஸ்.கே அணி தங்களது பழைய வீரர்களை மீண்டும் அணியில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஃபாஃப் டு பிளெசிஸ் ஆரம்ப விலையாக 2 கோடிக்கு தொடங்கப்பட்டார்.  ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது.  இந்நிலையில் விலை ஏறவே பாதியில் ஏலம் கேட்பதை நிறுத்தியது சென்னை.  இறுதியில் ஆர்.சி.பி அணி 7 கோடிக்கு டு பிளெசிஸை வாங்கியது.

 

மேலும் படிக்க | மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News