புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ, மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை ஆடவர் கிரிக்கெட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட லீக் போட்டிகளான ஐபிஎல், இனி மகளிர் பிரிவுக்கு தொடங்கப்படும். இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. 


இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மகளிர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் லீக் (IPL League) போட்டிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக தொடர்ந்து கலந்தாலோசனைகள் மேற்கொண்டு வருவதை உறுதிப்படுத்தினார். அடுத்த சில மாதங்களில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக் மற்றும் இங்கிலாந்தின் மகளிர் சூப்பர் லீக் வெற்றி பெற்றாலும், கிரிக்கெட்டின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் பெண்கள் டி20 லீக் நடைபெறாதது குறித்து பிசிசிஐ மீது கேள்விகள் எழுப்பப்பட்டன.


இது குறித்து பல முன்னாள் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், தற்போது சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மகளிர் ஐபிஎல் போட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


READ ALSO | 62 ரன்னில் நியூஸிலாந்தை சுருக்கிய இந்தியா!


பிசிசிஐ தொடர்ந்து ஆடவர் ஐபிஎல் லீக் போட்டிகளை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்கு காரணம் பொருளாதார வரவு என்று சொல்லப்படுகிறது.


அக்டோபரிலேயே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), லீக்கில் உள்ள அணிகளின் எண்ணிக்கையை 8ல் இருந்து 10 ஆக உயர்த்தியது. லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகளுக்கு அனுமதி கொடுத்தது. ஐபிஎல் போட்டிகள் மூலம் 12,500 கோடிகள் வருமானம் க்போகிறது. பிசிசிஐ ஆண்கள் விளையாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது, ஆனால் பெண்கள் கிரிக்கெட்டுக்கு (Women Cricket) அந்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை.


ஒருபுறம் ஐபிஎல்லின் இந்த உயரும் அந்தஸ்துக்காக இந்திய வாரியம் பாராட்டப்படுகிறது, மறுபுறம் பெண்கள் ஐபிஎல் தொடங்காததால் பிசிசிஐ விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. இந்திய அணியின் (Team India) செயல்பாடுகள் குறித்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், 'நேர்மையாகச் சொல்வதானால், இந்திய அணி 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக இருந்ததாலும். 2017 சாம்பியன்ஸ் டிராபியில், ஓவல் மைதானத்தில் பாகிஸ்தானிடம் தோற்றோம், நான் அப்போது வர்ணனையாளராக இருந்தேன்' என்று தெரிவித்தார்..


'அதன் பிறகு இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பையில், போட்டித்தொடர் முழுவதும் அற்புதமாக விளையாடினாலும், அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது. அதுவொரு மோசமான நாள் இரண்டு மாத அற்புதமான கடின உழைப்பை முழுவதுமாக கெடுத்த நாள் அது. அந்த டி20 உலகக் கோப்பையில் அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது'.


ALSO READ | இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR