புதுடெல்லி: ஐபில் போட்டித்தொடரின் இந்த ஆண்டுக்கான மெகா ஏலம் மும்முரமாக உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் அணிக்காக மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரு அணிகளும் தங்கள் கேப்டன்களை தேர்வு செய்துள்ளன. ஐபிஎல் போட்டிகளின் இந்த ஆண்டு தொடரில் (iIPL 2022) அகமதாபாத், லக்னோ ஆகிய இரு புதிய அணிகளும் இணைய உள்ளது போட்டிகளில் மேலும் சுவராசியங்களை ஏற்படுத்தும்.


புதிதாக இணையவிருக்கும் இந்த இரு அணிகளின் வீரர்கள் தேர்வு செய்வது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. 


தற்போது ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது. புதிய இரண்டு அணிகளும் மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளன.


ALSO READ | சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்


இந்த மூன்று வீரர்களை லக்னோ அணி தேர்வு செய்தது
இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு (Mega Auction) முன்னதாக லக்னோ தனது அணியில் மூன்று வீரர்களை சேர்த்துள்ளது. லக்னோ அணி, நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை 17 கோடி ரூபாயில் வாங்கியிருக்கிறது.


ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸை 9.2 கோடி கொடுத்து வாங்கிய லக்னோ அணி, இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக இருப்பார்.


லக்னோ அணியின் ஏல விவரங்கள்: கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னோய் (4 கோடி)


ALSO READ | க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா?


அகமதாபாத்தில் ஹர்திக் பாண்ட்யா


அகமதாபாத் அணியின் முதல் தேர்வாக ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருக்கிறார். 15 கோடி ரூபாய்க்கு ஹர்திக் பாண்ட்யா அகமாத் அணிக்காக ஏலத்தில் (Mega Auction)  வாங்கப்பட்டார்.


15 கோடி ரூபாய்க்கு  நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை வாங்கியுள்ள அகமதாபாத் அணி, இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை 8 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அகமதாபாத் அணியின் ஏல விவரங்கள்: ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), சுப்மான் கில் (8 கோடி)


ALSO READ | புதிய அணியின் கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்டியா?


ஐபில் மெகா ஏலம் எப்போது நடைபெறும்?
முன்னர் அறிவித்தபடி ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 7-8 ஆகிய தேதிகளில் நடைபெறப்போவதில்லை, பிப்ரவரி 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது.


பிசிசிஐயின் சில ஆதாரங்கள் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைந்திருப்பதால் அவர்களிடம் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


அகமதாபாத் மற்றும் லக்னோவில் சில சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் ஏலம் தொடர்பான பரபரப்புகளும் ஊகங்களும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. 


ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR