IPL 2022: க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா? பயிற்சி வீடியோ வைரல்!

ஐபிஎல் 2022 போட்டித் தொடரில் சிக்சர்களை அடித்து விளாச, கடுமையாக பயிற்சி செய்யும் க்ருணால் பாண்டியாவின் வீடியோ வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2022, 10:06 AM IST
  • க்ருணால் பாண்டியாவின் வைரல் வீடியோ
  • மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ருணால் பாண்டியா
  • கடுமையான பயிற்சியில் க்ருணால் பாண்ட்யா
IPL 2022: க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா? பயிற்சி வீடியோ வைரல்! title=

மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ருனால் பாண்டியா கடுமையான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பலவிதமான ஷாட்களை விளையாடுவதை அவரது சமூக ஊடகம் வெளிப்படுத்துகிறது.  

ஐபிஎல் 2022 போட்டித் தொடரில் சிக்சர்களை அடித்து விளாச, கடுமையாக பயிற்சி செய்யும் க்ருணால் பாண்டியாவின் வீடியோ வைரலாகிறது. சோர்வடையும் வரை பயிற்சி செய்யும் அவரது மனோபாவமும் வைரலாகிறது...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Krunal Himanshu Pandya (@krunalpandya_official)

க்ருணால் பாண்ட்யாவின் இன்ஸ்டா பக்கத்தில், ‘Too Inspired to be tired’ என்று தனது உறுதிமொழியை தலைப்பாக வைத்திருக்கிறார்.

ALSO READ | கேப்டன் விராட் கோலியின் சிறந்த 5 டெஸ்ட் வெற்றிகள்

ஐபிஎல் 2022க்கான ஏற்பாடுகள் மும்முரமாக இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் ஐபிஎல் வீரர்களுக்கான (IPL Cricketers) மெகா ஏலம் நடத்தப்படும். 

இதில் பல வீரர்களின் அணிகள் மாறும். இந்த சீசனுக்கு முன், மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ருணால் பாண்டியா வியர்வை சிந்தி கடுமையாக வலைப் பயிற்சி செய்து வருகிறார். 

சமூக ஊடகங்களில் க்ருணால் வீடியோ பகிர்ந்துள்ள வலைப் பயிற்சி  வீடியோவைப் பலரும் பார்த்து லைக் செய்வதுடன் அதிக அளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.

ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!

ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில்  பகிர்ந்துள்ள வீடியோவில் (Viral Video) பல வகையான ஷாட்களை ஆடுகிறார். அதில் அவர் சிக்சர்களை அடிக்க அதிக முயற்சி மேற்கொள்கிறார்.

இதுவரை இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர்கள் அனைத்திலும் இதுவரை நன்றாக செயல்பட்டுள்ள க்ருணால், 84 போட்டிகளில் விளையாடி 1143 ரன்கள் எடுத்துள்ளார். 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.   

ALSO READ | புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான அவகாசம் உள்ளது - பிசிசிஐ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News