ஐ.பி.எல்லுக்கு வரும் புது விதி: வரமா, சாபமா?!
கிரிக்கெட்டில் புதிய விதிகள் அறிமுகமாவதும் ஏற்கெனவே உள்ள விதிகள் திருத்தப்படுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விதி கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுதான் - ‘ஸ்ட்ரைக் ரொட்டேட்’ விதி.
கிரிக்கெட்டில் புதிய விதிகள் அறிமுகமாவதும் ஏற்கெனவே உள்ள விதிகள் திருத்தப்படுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விதி கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுதான் - ‘ஸ்ட்ரைக் ரொட்டேட்’ விதி.
முந்தைய நடைமுறை என்ன?
பேட்ஸ்மேன், கேட்ச் கொடுத்து அவுட்டானால் ஸ்ட்ரைக்கில் இருந்த பேட்ஸ்மேனும், எதிர்முனையில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனும் எதிரெதிராக ஓடி, கிராஸ் செய்துவிட்டால் அடுத்த பந்தில் எதிர்முனையிலிருந்து ஓடிவந்த பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கிற்கு வந்துவிடுவார். களத்துக்குள் வரும் புதிய பேட்ஸ்மேன் நேரடியாக எதிர்முனைக்கு செல்வார். இந்த விதிதான் காலம்காலமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் இதில் தற்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதற்காக புதிதாக ஸ்ட்ரைக் - ரொட்டேஷன் விதி (18.11 விதி) அறிமுகமாகி உள்ளது.
புதிய நடைமுறை என்ன?
இந்தப் புதிய விதியின் வாயிலாக, இனிமேல் கேட்ச்சின்போது கிராஸ் செய்து ஸ்ட்ரைக்குக்கு வந்தாலும் அவர் நேரடியாக பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படமாட்டார். அவுட் ஆன வீரருக்கு மாற்றாக எந்த வீரர் களம் இறங்குகிறாரோ அவருக்குத்தான் முதலில் நேரடியாக ஸ்ட்ரைக் வழங்கப்படும். அதேநேரம் இந்த விதியானது, ஓவரின் கடைசிப் பந்துக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல்லில் இந்த புதிய முறை அறிமுகம் ஆகவுள்ளது. சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரை, வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த விதிகள் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய விதிக்கு வீரர்களிடையே ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?
புதிய விதி வரமா, சாபமா?
போட்டியின் இறுதி ஓவர்களின்போது சில நேரம் அதிக ரன் தேவையானதாக இருக்கும். அப்போது ஸ்ட்ரைக்கில் யாரேனும் பந்துவீச்சாளர் பேட்டிங் செய்துகொண்டு இருக்கக்கூடும். அவ்வாறு அமையும் பட்சத்தில், தான் அவுட் ஆனாலும் பரவாயில்லை; எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கலாம் எனக் கருதி, கேட்ச் ஆகும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அடித்து ஆடக்கூடும். ரன் கிடைத்தால் லாபம்; அல்லது கேட்ச் ஆனாலும் ஓடும்போது எல்லையைக் கிராஸ் செய்துவிடுவதால் ஸ்ட்ரைக்குக்கு எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் வந்துவிடுவார் என அவர் பிளான் போடலாம். ஆனால் தற்போதைய இந்த புதிய விதி, அந்த பிளானுக்கு முடிவுகட்டியுள்ளது. இதனால் இனி அதுபோல பிளானிங் செய்து வீரர்கள் விளையாடமுடியாது.
அதேநேரம் பழைய விதிகளின்படி, வீரர் ஒருவர் கேட்ச் ஆனால் அவர் எதிர்முனை பேட்ஸ்மேனை கிராஸ் செய்துவிட்டாரா இல்லையா, யாரை ஸ்ரைக்குக்கு அனுப்பவேண்டும் என நீண்ட நேரம் ரீப்ளே செய்து நடுவர்களால் சோதனை செய்யப்படும். அதேபோல, வரப்போகும் முடிவுக்குத் தகுந்தாற்போல அடுத்துக் களமிறங்க வேண்டிய பேட்ஸ்மேனைக் கேப்டன் தயார்செய்யவேண்டும். தற்போதைய இந்த புதிய விதியால் இவ்வகை சிக்கல்கள் இனி தவிர்க்கப்படும்.
மேலும் படிக்க | சதங்களின் நாயகன் சச்சின்: 100 சதமடித்து 10 ஆண்டு நிறைவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR