சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?

சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்கும் எனப் பரவும் செய்தி குறித்து ஓர்  அலசல்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 17, 2022, 08:23 PM IST
  • சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதம் அடித்த சாதனை
  • சச்சின் சதம் குறித்துப் பரவும் செய்தி உண்மையா?
  • சச்சின் சதத்தால் இந்தியா எத்தனை முறை தோற்றது?
சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன? title=

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்து நேற்றுடன் பத்தாண்டுகளை நிறைவுசெய்துள்ளார். இந்தச் சாதனையை நினைவுகூர்ந்த ரசிகர்கள் பலர் சச்சினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர்.

வாழ்த்து மழை ஒருபுறம் பொழிந்தாலும் அதில் சிலர், ‘சச்சின் சதம் அடித்தாலே இந்தியா தோற்றுவிடும்’ என அவர்மீது வழக்கமான விமர்சனங்களையும் வைத்தனர். இன்று நேற்று அல்ல; கிரிக்கெட் உலகில் ரொம்பக் காலமாகவே சச்சின்மீது இந்த விமர்சனம் இருந்துவருகிறது. இந்த விமர்சனங்களில் உண்மையிலேயே நியாயம் இருக்கிறதா, சச்சின் சதம் அடித்தால் அந்த ஒண்டே மேட்ச்சை உண்மையிலேயே இந்தியா தோற்றுவிடுமா என கீழ்க்கண்ட புள்ளி விபரங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்.

மேலும் படிக்க | சதங்களின் நாயகன் சச்சின்: 100 சதமடித்து 10 ஆண்டு நிறைவு!

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சச்சின் டெண்டுல்கர் 100 சதம் அடித்துள்ளார். அவற்றுள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 49 சதங்களை அவர் விளாசியுள்ளார். அந்த 49 சதங்களில் இந்திய அணி 33 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. மீதமுள்ள போட்டிகளைக் கணக்கிட்டால் வெறும் 14 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. ஆக, இதுதான் கள நிலவரம். ஆனாலும்கூட, ‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர் இருக்கு.....’ எனும் கணக்காக, ‘சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்றுவிடும்’ என்கிற புரளி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ரேங்கில் முதல் இடத்தில் இந்திய வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News