புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மிக துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் 2 புதிய அணிகள் விரைவில் இடம்பெற இருக்கிறது. தகவல்களின்படி, சவுரவ் கங்குலி தலைமையிலான குழு புதிய ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் தேதியை நிர்ணயித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபரில் ஏலம்:
ஜெய் ஷா மற்றும் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தலைமையில் பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, ஏலம் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறலாம். 2022 முதல் ஐபிஎல் (IPL 2022) தொடரில் 8 அணிக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு பிசிசிஐ தரப்பில் இருந்து, ஐபிஎல் 15 வது சீசனில் (IPL 15th season) உரிமையாளர்களின் எண்ணிக்கை 8 லிருந்து 10 ஆக அதிகரிக்கப்படும் கூறியிருந்தது.


மெகா ஏலம் ஜனவரியில் நடக்கலாம்:
10 அணிகள் இடம்பெற்றால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வீரர்களை ஏலம் எடுக்க ஜனவரி மாதம் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. 2 புதிய அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐ வாரியம் 5000 முதல் 6000 கோடி வரை சம்பாதிக்க முடியும். அதிக அணிகள் பங்கேற்றால் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிலிருந்து கிடைக்கும் வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.


ALSO READ | BCCI on T20I: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 2 கூடுதல் T20 போட்டிகள்!


ஏலத்தில் பங்குபெற ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும்:
பிசிசிஐ அனைத்து டெண்டர் விவரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. அக்டோபர் 5 வரை டெண்டர் ஆவணங்களை (Invitation to Tender) வாங்கலாம். இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள ரூ.10,00,000 பணம் செலுத்த வேண்டும். அக்டோபர் 17 ஆம் தேதி ஏலம் நடக்கலாம். இ-ஏலம் இருக்காது. மேலும் இந்த ஐபிஎல் ஏலமானது அமீரகம் அல்லது மஸ்கட்டில் நடத்தப்படலாம் எனத் தகவல். ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 


பெரும் எதிர்பார்ப்பு:
ஐபிஎல் தொடரில் நுழைய உள்ள அந்த இரண்டு புதிய அணிகள் நகரத்தை மையமாக கொண்டு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ | IPL 2021: உங்க வயசுக்கு என்னால இப்படி விளையாட முடியாது ப்ரோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR