அம்மாடியோ! இத்தனை போட்டிகளா? 2023ல் இந்திய அணி விளையாடும் தொடர்கள்!
2023ல் இந்திய கிரிக்கெட் அணி உள்ளூர் போட்டிகள், ODI உலகக் கோப்பை 2023 என சில முக்கிய போட்டிகளில் விளையாட உள்ளது.
India vs Srilanka: 2022 முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி அடுத்த ஆண்டு சில முக்கிய போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை 2023 தவிர, இந்திய கிரிக்கெட் அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சில முக்கிய தொடர்களில் விளையாட உள்ளது. இது தவிர இந்திய வீரர்களும் ஐபிஎல் 2023ல் விளையாட உள்ளனர். அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போன்ற முக்கிய போட்டிகளில் பங்கேற்பார்கள். வங்கதேச தொடரை தொடர்ந்து இந்திய அணி சில மாதங்கள் பிஸியாக விளையாட உள்ளது. ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | மைதானத்தில் கோபமடைந்த விராட் கோலி! என்ன செய்தார் என்று பாருங்கள்!
சொந்த மண்ணில் இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா மோதுகிறது. ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஜனவரி 15ஆம் தேதி நிறைவடையும். 3 நாள் இடைவெளிக்குப் பிறகு இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இலங்கை சுற்றுப்பயணத்தைப் போலவே, இந்தியா நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஜனவரி 18ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவடைகிறது. 8 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் நீண்ட தொடரை எதிர்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தொடங்கி மார்ச் 24ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் முடிவடையும்.
பின்பு இந்திய வீரர்கள் ஐபிஎல் 2023-ல் விளையாட உள்ளனர். ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் 2023 போட்டிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டரை மாதம் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளது. 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பு வீரர்கள் ஒரு சிறிய இடைவெளியைப் பெறுவார்கள். ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் நாடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 செப்டம்பரில் முடிவடைந்தவுடன், இந்திய அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் பங்கேற்கும். ODI உலகக் கோப்பை அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ