ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) துவங்கும், நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டி நடபெறும் என BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதி விவரங்களை சரிபார்க்கவும், போட்டிகளுக்கான அட்டவணையை அங்கீகரித்து இறுதி செய்யவும் IPL கவர்னிங் கௌன்சில் அடுத்த வாரம் கூடுகிறது. எனினும், இந்த திட்டம் குறித்து அணி உரிமையாளர்களுக்கு (IPL Franchises) BCCI தகவல்களை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.


IPL, செப்டம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 51 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த போட்டிகள், அணி உரிமையாளர்களுக்கும்,  ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருத்தமானதாகவும் அனுகூலமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.


கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த T-20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ICC எடுத்த முடிவால்தான் இவ்வாண்டிற்கான IPL போட்டிகள் சாத்தியமாயின. கொரோனா தொற்று காரணமாக, தன் நாட்டில் நடக்கவிருந்த T-20 உலகக் கோப்பையை தற்போது நடத்த முடியாது என ஆஸ்திரேலியா தன் இயலாமையை வெளிப்படுத்தியதால், அவை ஒத்திவைக்கப்பட்டன.


செப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்ற ஊகங்கள் எழுந்திருந்தாலும், இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக BCCI அதை ஒரு வாரத்திற்கு முன்னதாக துவக்க முடிவு செய்தது.


ALSO READ: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள ஐபிஎல் 2020 தொடர்.. அனுமதி கேட்கும் பி.சி.சி.ஐ.


இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அரசாங்க விதிகளின்படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இருக்கும். என்று BCCI அதிகாரி ஒருவர் கூறினார்.


டிசம்பர் 3 ஆம் தேதி பிரிஸ்பேனில் துவங்கி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.


ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி அளிக்க குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதால், IPL உரிமையாளர்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வாக்கில் தங்கள் குழுக்களின் பயணங்களை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு போட்டிகளுக்கு தயாராக நான்கு வார கால அவகாசத்தை அளிக்கும்.


பணம் கொழிக்கும் IPL போட்டிகள்,  முதலில் மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன.  ஆனால் COVID-19 தொற்றுநோய் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இவை ஒத்திவைக்கப்பட்டன.


இருப்பினும், இந்த ஆண்டு இந்த நிகழ்வு கண்டிப்பாக நடக்கும் என BCCI தலைவர் சௌரவ் கங்குலி அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தார். 


ALSO READ: பயங்கர கோபத்தில் சோயிப் அக்தர், 'T20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பு; BCCI இன் கை'