IPL 2023: மும்பை அணிக்கு திடீர் சிக்கல்... ரோகித் இல்லை இனி இவர்தான் கேப்டன்?
IPL 2023 Rohit Sharma: கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடம்பிடித்திருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் ஒருசில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2023 Rohit Sharma: ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்று தடுமாறி வருகிறது. அதனை வழிநடத்தும் ரோஹித் சர்மாவுக்கு தற்போது கூடுதல் அழுத்தம் உள்ளது. இந்தாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், கேப்டன் ரோஹித் இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதால் அவருக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. எனவே, அந்த தொடருக்கு தயராகும் வகையில் ரோஹித் சர்மா சற்று அதிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் பல்வேறு போட்டிகள் இருப்பதால், அவரின் பணிச்சுமையை குறைப்பதற்காக ஒரு சில ஐபிஎல் போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் டெண்டுல்கருக்கு வாய்ப்பு ரோஹித் சர்மா பரிசீலனை
கேப்டன் சூர்யகுமார்
இதனால், ரோஹித் இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் இருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு லண்டனில் உள்ள ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பையும் திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியாவின் போட்டி அட்டவணை சற்று நெருக்கடியாகவே உள்ளது.
எனவே, ரோஹித் இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் ஐபிஎல் ஆட்டங்களில் தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் விளையாட வாய்ப்புள்ளது, இருப்பினும் அவர் அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்றும் அவர் விளையாடாத போது, பெவிலியனில் இருந்து சூர்யகுமாரை வழிநடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகு அறுவைசிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியதால், மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே சற்று சிக்கலில் இருக்கிறது. எனவே, ரோகித் இல்லாத இந்த ஒரு சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு, இந்திய அணி வீரர்களை இப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதியுடன் வைத்திருப்பது ஐபிஎல் அணிகளின் கையில் உள்ளது என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். "இது அனைத்தும் இப்போது ஐபிஎல் அணிகளை பொறுத்தது. நாங்கள் அணிகளுக்கு சில குறிப்புகளை வழங்கியுள்ளோம், இருப்பினும் அவை அணி நிர்வாகத்தை பொறுத்தது.
மேலும் முக்கியமாக, இது வீரர்களைப் பொறுத்தது. அவர்கள் அனைவரும் பெரியவர்கள்; அவர்கள் தங்கள் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகமாகிவிட்டதாக அவர்கள் உணர்ந்தால், அதைப் பற்றிப் பேசி ஓரிரு ஆட்டங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அது நடக்குமா என்பது எனக்கு சந்தேகம்" என ரோகித் சென்னையில் கூறியிருந்தார்.
ஐபிஎல் 2022இல், ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி, ஒரு அரைசதம் கூட இல்லாமல் 268 ரன்களுடன் 19.14 மட்டுமே சராசரி வைத்திருந்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைதான் பிடித்திருந்தது.
மேலும் படிக்க | IPL 2023: விராட் பட்டறையில் மீண்டும் ஒரு வேகப்புயல்... இந்த முறை யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ