CSK Fans Celebration Viral Video: நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. குறிப்பாக, பலம் வாய்ந்த குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்து சிஎஸ்கே இந்த வெற்றியை பெற்றது. கான்வே, ருதுராஜ், தூபே, ராயுடு என அனைவரும் கைக்கொடுக்க, ஜடேஜா அந்த பினிஷிங் ஷாட்டை அடித்து கோப்பையை தூக்க வழிவகுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, மோகித் ஷர்மா முதல் நான்கு பந்துகளை அற்புதமான யார்க்கர்களாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால், ஜடேஜா 5ஆவது பந்தை சிக்ஸருக்கும், 6ஆவது பவுண்டரிக்கும் அனுப்பி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு ஆழ்த்தினார். 


இந்த வெற்றியால் எதற்கும் ரியோக்சன் தராமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் தோனியே கண்ணீர்விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தோனி, ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டாடிய தருணம் இன்னும் பல ரசிகர்களின் மனக்கணக்கில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியும். 


மும்பையின் சாதனையை சமன் செய்து ஐந்தாவது முறையாக சிஎஸ்கேவும் கோப்பையை வென்றது. இது ஒருபுறம் இருக்க, இதைவிட நல்ல செய்தியை தோனி கோப்பையை பெறும்போது வர்ணனையாளர் ஹர்ஷாவிடம் கூறினார். அதாவது,"இந்த வெற்றி பெற்ற சூழலை பார்க்கும்போது, இப்போதே ஓய்வை அறிவிப்பதுதான் சிறந்த நேரமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். மேலும், இந்த சூழலில், நான் ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம்தான். 


மேலும் படிக்க | கோப்பையை வாங்கிய கையுடன் மருத்துவமனை செல்லும் தோனி...? - வெளியான தகவல்!


ஆனால் இன்னும் ஒன்பது மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவது கடினமான விஷயம், அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற இத்தகைய அன்பிற்கு, இன்னும் ஒரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரு பரிசாக இருக்கும். அவர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய ஒன்று" என தோனி கூறியிருந்தது கோடாணக்கோடி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது எனலாம். 


அந்த வகையில், கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் சிஎஸ்கே வெற்றி கொண்டாட்டங்கள் தான் நிறைந்திருக்கிறது. தோனியின் வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி பலரும் தங்களின் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர். ஜடேஜாவின் அந்த வின்னிங் ஷாட்டை அடுத்து பலரும் குஷியில், கொண்டாட்டடத்தில் கத்திய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.



இந்நிலையில், ஹாஸ்டல் அறையில் மாணவர்கள் இணைந்து போட்டியை பார்த்துக்கொண்டிருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது. மேலும், அதில் ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டுக்கு பின், ஒரு மாணவன் கத்தி, கதவை அடிப்பது, ஓடுவது, ஜன்னலின் மேல் தாவுவது என மற்ற மாணவர்களையே மிரட்சிக்கு உள்ளாக்கும் அளவுக்கு நடந்துகொண்ட வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 


இது எங்கு எடுக்கப்பட்டது, அந்த மாணவன் யார் என்று தெரியாவிட்டாலும் நிச்சயம் இதுதான் பல சிஎஸ்கே ரசிகர்களின் அன்றைய நிலைமை என்பது மட்டும் உறுதி. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தோனி பேசிய வார்த்தைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ