IPL 2023 Playoff Scenarios: சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்தை பிடிக்க கடும் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பு தொடரில் இன்றுடன் சேர்த்து மொத்தம் 4 போட்டிகள் நடைபெறுகிறது. நான்கு போட்டிகளின் முடிவுகளும் புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2023 லீக் கட்டத்தின் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மூன்று பிளேஆஃப் இடங்கள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. ஆறு அணிகள் பிளேஆஃப்களுக்குள் நுழைய இன்னும் வாய்ப்பு உள்ளது. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், க்ருனால் பாண்டியாவின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நிதிஷ் ராணாவின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 6 அணிகள் இன்னும் பிளேஆஃப்க்குள் நுழைய வாய்ப்புள்ளது. 


பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன. எனவே, இந்த நான்கு போட்டிகளில் யார் யார் ஜெயித்தால், எந்தெந்த அணி எந்த இடத்தை பிடிக்கும் என்பதை இதில் காணலாம். 


சென்னை சூப்பர் கிங்ஸ்


மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி இன்று டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். இருப்பினும், எல்.எஸ்.ஜி 15 புள்ளிகளில் இருப்பதால் முதல்-இரண்டு இடத்தைப் பெறுவதற்கு சென்னை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற வேண்டும்.


மேலும் படிக்க | DC vs CSK: தோனி விளையாடும் கடைசி போட்டி? என்ன நடக்கிறது சென்னை அணியில்?


சென்னை தோல்வியடைந்தாலும், லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் சிஎஸ்கே முதல் நான்கு இடங்களில் நீடிக்க வாய்ப்புள்ளது. தற்போது 13 போட்டிகளில் விளையாடி உள்ள 15 புள்ளிகளுடன் +0.304 நெட் ரன்ரேட் உடன் உள்ளது. 


லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்


ஏறத்தாழ சிஎஸ்கே அணிக்கு என்ன நிலைமையோ அதேதான் லக்னோ அணிக்கும். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால், அவர்கள் முதலிரண்டு இடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. தோல்வி ஏற்பட்டாலும் கூட சென்னை, பெங்களூரு, மும்பை ஆகியவற்றின் போட்டி முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


கடந்த இரண்டு ஆட்டங்களில் பெற்ற பெரிய வெற்றிகள் பெங்களூரு நல்ல ரன்-ரேட்டைக் கொடுத்துள்ளன. குஜராத் அணிக்கு எதிரான வெற்றியானது மும்பை, ஹைதராபாத் அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால், அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பெறுவதை உறுதிசெய்யும். 


இரண்டு போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஆர்சிபியின் நெட் ரன்ரேட் மும்பையை விட கூடுதலாக உள்ளது. சென்னை அல்லது லக்னோ அணிகளில் ஒருவர் தங்களின் போட்டிகளில் தோல்வியடைந்தால், ஆர்சிபி குஜராத்தை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தால், அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.


பெங்களூரு தோல்வியடைந்தாலும், சன்ரைசர்ஸ் மும்பை அணியை தோற்கடித்தால், பெங்களூரு அவர்களின் சிறந்த ரன்-ரேட் காரணமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். கொல்கத்தா லக்னோ அணியை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும் மற்றொரு சூழ்நிலை உள்ளது. அப்படியானால், ரன்ரேட் ஒரு பெரிய பங்கை வகிக்கும். பெங்களூரு அணி, கேகேஆர், மும்பை, லக்னோ அணிகளை விட சிறந்த நெட் ரன்ரேட்டை கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | IPL: சதம் அடிக்கும் திறமையால் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் ரன் மெஷின்கள் பட்டியல்


மும்பை இந்தியன்ஸ்


ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும், அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் பலவீனமான ஹைதராபாத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே, லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தங்களின் கடைசி போட்டிகளில் தோல்வியடையும் என்றால் மும்பை அணிக்கு அது சாதகமாக அமையும்.


சென்னை, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தங்கள் ஆட்டங்களில் தோல்வியடைந்து ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி பெரிய வெற்றியைப் பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் வர அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட்டது. இப்போது மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும். குறிப்பாக பெங்களூரு, மும்பை அணிகளின் கடைசி போட்டிகளை சார்ந்து. முதல் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு அந்த இரு அணிகளும் தத்தமது ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும். ராஜஸ்தான் முதல் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு RCB பெரிய அளவில் தோல்வியடைய வேண்டும். KKR அவர்களை மிஞ்சிவிடும். ஆனால் அது நடக்க கொல்கத்தா, 100 ரன்களுக்கு மேல் லக்னோவை தோற்கடிக்க வேண்டும்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


அவர்கள் முதல் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மற்ற போட்டிகளின் முடிவுகளுக்கும் காத்திருக்க வேண்டும். கொல்கத்தா தகுதிபெற, ஆர்சிபி மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.


மேலும் படிக்க | ஜெய்ஷ்வால் - ஹெட்மயர் அதிரடியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்..! பிளே ஆஃப்புக்கு செல்லுமா?